தென்கிழக்கு வங்கக்கடலில் நாளை மறுதினம் உருவாக உள்ள மோந்தா புயல் வரும் செவ்வாய்க்கிழமை மாலை ஆந்திராவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் கணித்திருக்கிறது.
தென்கிழக்கு வங்கக்கடலில் நிலவி வரும் காற்றழுத்த தாழ்வு மண்டலம் 3 மணி நேரத்தில் மணிக்கு 7 கிலோமீட்டர் வேகத்தில் மேற்கு நோக்கி நகர்ந்திருப்பதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னையிலிருந்து தென்கிழக்கில் 950 கிலோமீட்ட தொலைவில் காற்றடுத்த தாழ்வு மண்டலம் நிலை கொண்டிருக்கிறது. இது மேலும் மேற்கு வடமேற்கு திசையில் நகர்ந்து நாளை ஆழ்ந்த காற்றெடுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
இதன் தொடர்ச்சியாக நாளை மறுதினம் தென்மேற்கு மற்றும் அதனை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில் புயல் உருவாக கூடும் என்று வானிலை மையம் தெரிவித்துள்ளது. புயலாக உருவான பிறகு வடமேற்கு திசையில் பயணித்து செவ்வாய்க்கிழமை காலை தீவிர புயலாக வலுபெறும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. மேலும் தொடர்ந்து வடக்கு வடமேற்கு திசையில் பயணிக்க உள்ள புயல் ஆந்திராவின் காக்கிநாடா அருகே மசுலிங்கினி பட்டினம் மற்றும் கலிங்கப்பட்டினம் இடையே செவ்வாய்க்கிழமை மாலை அல்லது இரவில் கரையை கடக்கும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: புயல் வருது... பேனர்கள் வைக்க கூடாது... புதுவைக்கு பறந்த ஸ்ட்ரிட் ஆர்டர்...!
புயல் கரையை கடக்கும்போது மணிக்கு 90 முதல் 100 கிலோமீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என வானிலை ஆய்வு மையம் கணித்துள்ளது. தமிழ்நாட்டில் இன்று 12 மாவட்டங்களில் கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. குறிப்பாக சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, விழுப்புரம் மற்றும் கடலூரில் இன்று கனமழை பெய்யக்கூடும் என கணிக்கப்பட்டுள்ளது. இதேபோல நீலகிரி, கோவை, திண்டுக்கல், தேனியிலும் இன்று கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்காசி, நெல்லை, கன்னியாகுமரியில் இன்று கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை மையம் கணித்துள்ளது. இதன் தொடர்ச்சியாக சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, ராணிப்பேட்டை, விழுப்புரத்தில் நாளை கனமழைக்கு வாய்ப்பிருப்பதாக வானிலை ஆய்வு மையம் கூறியுள்ளது. வரும் திங்கட்கிழமை சென்னை, திருவள்ளூர், ராணிப்பேட்டையில் மிக கனமலைக்கான ஆரஞ்சு எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: #BREAKING சென்னையில் இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறையா? - மாவட்ட ஆட்சியர் முக்கிய அறிவிப்பு...!