சென்னை பெரவல்லூர் பகுதியைச் சேர்ந்த 21 வயது இளம்பெண் ஒருவர், பெரவல்லூர் காவல் நிலையத்தில் அதிர்ச்சிகரமான புகார் ஒன்றை அளித்துள்ளார்.
குறிப்பாக, தனது தாயை இரண்டாவதாக தலைமைச் செயலக காலனி காவல் நிலையத்தில் பணியாற்றி வரும் தலைமை காவலர் ஒருவர் திருமணம் செய்து கொண்டு வாழ்ந்து வந்ததாகவும், அந்தத் தலைமை காவலர் தொடர்ந்து தனக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாகவும் அந்த இளம்பெண் புகாரில் தெரிவித்துள்ளார்.
மேலும், தனக்கு 17 வயதாக இருந்தபோது பாலியல் வன்கொடுமை செய்ததாகவும், அதன் பின்னர் கருக்கலைப்பு செய்ததாகவும் அந்த இளம்பெண் தலைமை காவலர் மீது குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார்.
இதையும் படிங்க: சீறி பாய்ந்த தோட்டா... சிறுமியை சீரழித்த காம மிருகத்தை சுட்டுப்பிடித்த போலீஸ்... கோவையில் நடந்தது என்ன?
தற்போது தனக்கு 21 வயதாகும் நிலையில், ஸ்னாப்சாட் மூலம் பெங்களூரைச் சேர்ந்த ஒருவரை காதலித்து வருவதாகவும், இதுகுறித்து தலைமை காவலரிடம் தெரிவித்தபோது, காதல் செய்யக்கூடாது என்றும், தன்னுடனேயே இருக்க வேண்டும் என்றும் தொடர்ந்து மிரட்டியதாகவும் அவர் புகாரில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும், தனது தாயைக் கொன்றுவிடுவதாகவும் அந்தத் தலைமை காவலர் மிரட்டியதாகவும் இளம்பெண் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவரிடம் கேள்வி எழுப்பியபோது, தன்னைத் தாக்கியதாகவும் அந்த இளம்பெண் தனது புகாரில் கூறியுள்ளார்.
இதையடுத்து, பெரவல்லூர் போலீசார் சம்பந்தப்பட்ட தலைமை காவலரை காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
விசாரணை நிறைவடைந்த பின்னர், இளம்பெண் அளித்துள்ள புகாரில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டுகள் உண்மை என தெரியவந்தால், தலைமை காவலர் உடனடியாக கைது செய்யப்படுவார் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: பாலியல் டார்ச்சர் கொடுத்த அறிவியல் ஆசிரியர்... மன உளைச்சலில் மாணவி எடுத்த விபரீத முடிவு... 5 நாட்களுக்குப் பிறகு இப்படியா?