இன்று அதிகாலை நிலவரப்படி மாமல்லபுரத்திற்கு தெற்கே கரையைக் கடந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்டங்களில் காற்றழுத்த தாழ்வு பகுதியாக நீடித்து வந்த நிலையில், அடுத்த 24 மணி நேரத்தில் மேற்கு திசை நோக்கி நகர்ந்து தீவிர காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்து, அரபிக்கடல் பகுதிக்கு நகரும் என எதிர்பார்க்கப்பட்டது.
ஆனால் சென்னை அருகே மையம் கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக வலுவிழந்ததாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. வட தமிழ்நாடு புதுச்சேரி கடலோரப் பகுதியில் இன்று காலை 5.30 மணி நிலவரப்படி, குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுவிழந்ததாகவும், இது மேலும் வடகடலோர தமிழ்நாடு - புதுச்சேரிக்கு தென் மேற்கு நோக்கி நகர்ந்து அடுத்த 24 மணி நேரத்தில் குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக மேலும் வலுவிழக்கக்கூடும் என இந்திய வானிலை ஆய்வு மையம் அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: திருவண்ணாமலைக்கு நெய் காணிக்கை செலுத்தப் போறீங்களா?... இதை முதல்ல தெரிஞ்சிக்கோங்க...!
இதன் காரணமாக சென்னை, செங்கல்பட்டு, திருவள்ளூர், காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, கடலூர், மயிலாடுதுறை, அரியலூர், பெரம்பலூர், தஞ்சை, திருவாரூர், நாகை, புதுக்கோட்டை, திருச்சி, ராமநாதபுரம், கோவை, தேனி, தென்காசி, நெல்லை, நீலகிரி உட்பட 22 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு என வானிலை ஆய்வு மையம் தகவல் தெரிவித்துள்ளது.
இதில் நீலகிரி, ஈரோடு, கோவை மாவட்டங்களில் இன்று மிக கனமழைக்கு வாய்ப்புள்ளதாகவும், திருப்பூர், தேனி, திண்டுக்கல், தென்காசி, திருநெல்வேலி, கன்னியாகுமரி, சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கனமழை பெய்ய வாய்ப்புள்ளதாகவும், சென்னையில் மிதமான மழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை மையம் கணித்துள்ளது.
இதையும் படிங்க: நகராமல் நங்கூரமிட்ட‘டிட்வா’...!! சென்னையில் 2 நாட்களாக மழை வெளுத்து வாங்க இதுவே காரணம் - வானிலை ஆய்வு மையம் முக்கிய அப்டேட்...!