சமூக ஊடக சவால்களை எதிர்கொள்வது குறித்து நடைபெற்ற பயிற்சி பட்டறையில் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கலந்து கொண்டார். அப்போது பேசிய அவர், ஒரு விஷயத்தை யார் சொன்னாலும், நானே சொன்னாலும், ஏன் அதை நானே சொன்னாலும் நம்பாதே என கூறியவர் தந்தை பெரியார் என்றும் இது பெரியாரால் பண்படுத்தப்பட்ட மண் என்று கூறினார்.
ஒரு நல்ல செய்தி எவ்வளவு விரைவாக செல்கிறதோ அதைவிட பன்மடங்கு விரைவாக பொய் செய்தி மக்களிடம் சென்று சேர்ந்து விடும் என கூறினார். பொய் செய்தியை பரப்புவதையே Full Time Job-ஆக செய்கிறது ஒரு பாசிச கும்பல்., அது யார் என்று நான் சொல்ல வேண்டிய அவசியம் இல்லை என்றார்.

பொய் செய்திகளை பரப்பி மக்களிடம் குழப்பத்தை ஏற்படுத்தவும், மழுங்கடிக்கவும் முயற்சித்து அதையே வேலையாக செய்து வருகிறார்கள் என்று குற்றம் சாட்டினார். வதந்திகளை எப்படி கையாள வேண்டும் என்ற கேள்வி உலகளாவிய அளவில் இருப்பதாகவும், வதந்திகளில் இரண்டு விதம் உள்ளதாகவும் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்தார். ஒன்று எந்த ஒரு உள்நோக்கமும் இல்லாமல் பரவும் செய்தி என்றும், மற்றொன்று உள்நோக்குத்துடன் பரப்பப்படும் செய்தி எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: முதலமைச்சரின் தாயுமானவர் திட்டம்.. தனது தொகுதியில் களமிறங்கிய துணை முதல்வர்..!!
உள்நோக்கத்துடன் பரப்பப்படும் தகவல்கள் மிகவும் ஆபத்தானது என்றும்., Global risk 2024-ன் படி, மிகப்பெரிய ஆபத்துகளில் உள்நோக்குத்துடன் பரப்பப்படும் தகவல்கள் இரண்டாம் இடத்தை பிடித்துள்ளதாகவும் சுட்டிக்காட்டினார். ஆனால் வரும் காலங்களில் உள்நோக்கத்துடனும், உள்நோக்கம் அல்லாத தகவல்கள் தான் உலகின் மிகப்பெரிய ஆபத்தாக இருக்கும் என கூறினார்.
இதையும் படிங்க: ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வேலை நடக்குது! சென்னை மாநகராட்சி சொன்ன ஹாப்பி நியூஸ்…