தர்மபுரி மாவட்டத்தில் ஓட்டுநரின் கட்டுப்பாட்டை இழந்த அரசு பேருந்து ஒன்று வீட்டின் மீது மோதி உள்ளது. அப்போது வீட்டின் முன்பு விளையாடிக் கொண்டிருந்த ஆத்விகா என்ற நான்கு வயது சிறுமி படுகாயம் அடைந்தார். ஓட்டுனர் மற்றும் குழந்தை ஆகியோர் மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்ட நிலையில் குழந்தை ஆத்விகா உயிரிழந்துள்ளார். இந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தி உள்ள நிலையில் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகளால் விபத்துக்கள் நிகழ்வதாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
தர்மபுரி மாவட்டம் நூலஹள்ளி கிராமத்திலிருந்து தர்மபுரி நகரத்தை நோக்கி பேருந்து ஒன்று வந்துள்ளது. இந்தப் பேருந்தை தேவராஜ் என்பவர் ஓட்டி வந்துள்ளார். உழவன் குப்பம் பகுதியில் பேருந்து வந்து கொண்டிருந்தபோது ஸ்டேரிங் கட்டானதால் பேருந்து ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்துள்ளது.

அருகில் இருந்து வீட்டில் பேருந்து பலமாக மோதி
விபத்துக்குள்ளானது. வீட்டு முன்பு சோனியா - நரசிம்மன் தம்பதியின் மகள் அத்விகா விளையாடிக் கொண்டிருந்தார். இந்த விபத்தில் அவர் பலத்த காயமடைந்தார். தொடர்ந்து விபத்தில் பலத்த காயமடைந்த குழந்தை மற்றும் ஓட்டுநர் தேவராஜ் ஆகியோர் உடனடியாக மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்டனர். இந்த நிலையில் குழந்தை சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளது மேலும் தேவராஜுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது தகவல் அறியும் சென்ற போலீஸ் விபத்து குறித்து வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். விபத்துக்குள்ளான பேருந்தை அந்த பகுதியில் இருந்து எடுக்க பொதுமக்கள் மறுப்பு தெரிவித்ததுடன் ஆத்திரத்தில் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதையும் படிங்க: உத்தரகாண்டில் சோக சம்பவம்: ஆற்றில் கவிழ்ந்து சுக்குநூறான பஸ்.. ஒருவர் பலி, 7 பேர் காயம்..!
தர்மபுரியில் முறையான பராமரிப்பு இல்லாத பேருந்துகள் ஒன்றும் குழியுமான சாலைகளில் செல்வதால் அடிக்கடி விபத்துக்கள் ஏற்படுவதாக கூறப்படுகிறது. பேருந்துகளை சீரமைத்து பேருந்துகளின் எண்ணிக்கையை அதிகரிக்க வேண்டும் என்று தர்மபுரி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: சிறுமியை சீரழித்த காமக்கொடூரன் இவன் தானா? உ. பி. இளைஞரிடம் தீவிர விசாரணை..!