கிருஷ்ணகிரியில் இருந்து வந்த லாரி தொப்பூர் அருகே கட்டுப்பாட்டை இழந்து பயங்கர விபத்து ஏற்பட்டது. பைக் மற்றும் ஆம்னி வேன் மீது மோதிய விபத்தில் நான்கு பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது. நான்கு பேர் படுகாயங்களுடன் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்த சம்பவம் குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
கிருஷ்ணகிரியில் இருந்து கோழி தீவனம் ஏற்றி வந்த லாரி ஒன்று தர்மபுரி மாவட்டம் தொப்பூர் அருகே சென்று கொண்டிருந்தது. அப்போது அங்கிருந்த பள்ளத்தால் கட்டுப்பாட்டை இழந்த லாரி, முன்னால் சென்று கொண்டிருந்த இருசக்கர வாகனம் மீது பயங்கரமாக மோதியது. அது மட்டுமல்லாது அதற்கு முன் சென்று கொண்டிருந்த ஆம்னி வேன்மீதும் மோதி உள்ளது.

இந்த கோர விபத்தில் லாரி ஓட்டுநர் மற்றும் அவரது உதவியாளர் இருவரும் உயிரிழந்துள்ளனர். மேலும், இருசக்கர வாகனத்தில் பயணித்த கணவன், மனைவி இருவரும் உயிரிழந்துள்ளனர். நான்கு பேரும் சம்பவ இடத்திலேயே பலியான நிலையில், ஆம்னி வேனில் பயணித்த நான்கு பேர் படுகாயம் அடைத்தனர். இந்த விபத்தில் காயமடைந்தவர்கள் நான்கு பேரும் தீவிர சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்குச் சென்ற போலீசார் மற்றும் அதிகாரிகள் விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: தனியா 40 சீட்டு எனக்கு கொடுங்க!! இளைஞரணிக்காக வரிந்து கட்டும் உதயநிதி! ஸ்டாலின் யோசனை!
அது மட்டுமல்லாது உயிரிழந்தவர்களின் உடல்களும் பிரேதப் பரிசோதனைக்காக தர்மபுரி அரசு மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இந்த விபத்தால் தர்மபுரி - சேலம் நெடுஞ்சாலையில் 2 மணி நேரத்திற்கு மேலாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. 10 கிலோமீட்டர் க்கு மேலாக வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் சூழல் ஏற்பட்டது. தர்மபுரியில் இருந்து சேலம் செல்லும் எந்த வாகனமும் உடனடியாக செல்ல முடியாத சூழல் ஏற்பட்டதால் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது.
இதையும் படிங்க: நிபந்தனைகளை மீறினால்... பெரியார் மண்ணில் இருந்து விஜய்க்கு பறந்த எச்சரிக்கை... கட்டுப்பாடுகளை தாக்குப்பிடிக்குமா தவெக?