தமிழகத்தில் பாரம்பரிய அசைவ விருந்தாக இருந்த சாதம்-ஆட்டுக்கறி குழம்பு, தற்போது பிரியாணி என்று மாறியுள்ளது. கிராமம் முதல் நகரம் வரை, ஆண்டுக்கு 11,000 கோடி ரூபாய் பிரியாணி வியாபாரம்! சென்னையில் மட்டும் 5,500 கோடி. தீபாவளிக்கு (அக்டோபர் 20) புரட்டாசி முடிவடையும் நிலையில், அசைவ பிரியாணி ஆர்டர்கள் களைகட்டுகின்றன. உணவகங்கள் 250 கோடி ரூபாய் விற்பனை எதிர்பார்க்கின்றன.
பாரம்பரியமாக தீபாவளிக்கு காலை இட்லி-ஆட்டுக்கறி குழம்பு, மதியம் சாதம்-சுக்கா என்று அசைவ விருந்து வழக்கம். ஆனால், கடந்த சில ஆண்டுகளாக சென்னை, கோவை போன்ற நகரங்களில் பிரியாணி முதன்மை உணவாக மாறியது. இப்போது தமிழகம் முழுவதும் பிரியாணி ஆடம்பரம்! சென்னை, சுற்று மாவட்டங்களில் பாசுமதி அரிசி மட்டன்/சிக்கன் பிரியாணி; மற்ற இடங்களில் சீரக சம்பா பிரியாணி பிரபலம். ஆம்பூர், திண்டுக்கல், கொங்கு பிரியாணி வகைகள் மக்களுக்கு அத்துப்பிடி.
வீட்டில் சமைத்தால் சுவை தெரியாது என, உணவகங்களில் சாப்பிடுகின்றனர் அல்லது 1-2 கிலோ ஆர்டர் செய்து வீட்டு விருந்துக்கு வாங்குகின்றனர். இதனால் அனைத்து அசைவ உணவகங்களிலும் பிரியாணி விற்பனை 70%க்கும் மேல். வார இறுதியில் (வெள்ளி-சனி-ஞாயிறு) சராசரி 120 கோடி ரூபாய் வியாபாரம்.
இதையும் படிங்க: ஏமனில் கேரள நர்ஸ் தொடர்பான வழக்கு..!! மரண தண்டனை நிறுத்திவைப்பு.. உச்சநீதிமன்றத்தில் தகவல்..!!

புரட்டாசி மாதம் (அசைவம் தவிர்த்தல்) இன்றுடன் முடிவடைகிறது. இதனால், அசைவ பிரியர்கள் தீபாவளிக்கு பிரியாணி வெறியில் முன்பதிவு செய்கின்றனர். உணவகங்கள் மட்டன் பிரியாணி, சிக்கன் பிரியாணி, சிக்கன் 65, மட்டன் சுக்கா என பேக்கேஜ்களில் ஆர்டர்கள் பெறுகின்றன. "புரட்டாசி விடுதலை – தீபாவளி சனி-ஞாயிறு-திங்கள் மூன்று நாட்களில் 250 கோடி விற்பனை நடைபெறும்" என உணவக உரிமையாளர்கள் எதிர்பார்க்கின்றனர்.
ஒரு பிரியாணி கடை உரிமையாளர் கூறுகையில், "தீபாவளி அசைவ விருந்து தொன்மையானது. புரட்டாசி ஒரு மாதம் அசைவம் தவிர்த்தவர்கள் இப்போது பிரியாணி சாப்பிட விரும்புகின்றனர். முன்பதிவுகள் நிறைந்துள்ளன. வார இறுதி விற்பனை 120 கோடி; தீபாவளிக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி!" என்றார்.
இந்த பிரியாணி புரட்சி, தமிழக உணவு பழக்கங்களின் மாற்றத்தை காட்டுகிறது. தீபாவளி விருந்துக்கு பிரியாணி ஆர்டர் செய்ய விருப்பமுள்ளவர்கள் உணவகங்களை தொடர்பு கொள்ளலாம். பிரியாணி வகைகள், சுவைகள் தேர்ந்தெடுத்து கொண்டாடலாம்!
இதையும் படிங்க: போட்றா வெடிய… அதிமுகவின் 54 ஆவது ஆண்டு விழா… களைக்கட்டியது கட்சி அலுவலகம்…!