2025 ஆம் ஆண்டுக்கான தீபாவளி பண்டிகை அக்டோபர் 20 ஆம் தேதி கொண்டாடப்படுகிறது. தீபாவளி என்றாலே முதல் இடத்தை பிடிப்பது பட்டாசு. அதற்கு அடுத்தபடியாக பலகாரம். உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு பலகாரம் கொடுத்து தங்களது வாழ்த்துக்களை பகிர்வது வழக்கம். சிறியவர்கள் முதல் பெரியவர்கள் வரை அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக பட்டாசுகள் இருக்கிறது. பட்டாசு வெடித்து தீபாவளி கொண்டாடுவது என்பது வயது வித்தியாசம் பார்க்காமல் அனைவருக்கும் பிடித்தமான ஒன்றாக இருக்கிறது.
ஆனால், டெல்லியில் காற்று மாசுவை கட்டுப்படுத்தும் விதமாக கடந்த 5 ஆண்டுகளாக தீபாவளி பண்டிகைக்கு பட்டாசுகள் வெடிக்க தடை விதிக்கபட்டு வருகிறது. டெல்லியில் ஏற்பட்டுள்ள கடும் காற்று மாசு தாக்கத்தால் பட்டாசுகளுக்கு தடை விதிக்கப்பட்டது.

மேலும், டெல்லியில் எந்த வகையான பட்டாசுகளை தயாரிப்பதற்கும், சேமிப்பதற்கும், விற்பனை செய்வதற்கும், ஆன்லைனில் டெலிவரி செய்வதற்கும், பட்டாசுகளை வெடிப்பதற்கும் முழுவதுமாக தடை விதிக்கப்பட்டது. இந்த நிலையில் டெல்லியில் நடப்பாண்டு தீபாவளி பண்டிகைக்கு பசுமை பட்டாசுகள் வெடிக்கலாம் என்றும் ஐந்து நாட்களுக்கு அனுமதி வழங்கப்படுவதாகவும் உச்ச நீதிமன்றம் தெரிவித்தது. இதேபோல் பட்டாசுகள் வெடிக்க நேர கட்டுப்பாடு விதிக்கப்பட்டது. காலை 6 மணி முதல் 7 மணி வரையும், இரவு 7 மணி முதல் 8 மணி வரையும் மட்டுமே ஒலி எழுப்பும் பட்டாசுகளை வெடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இதையும் படிங்க: தீபாவளிக்கு பட்டாசு வெடிக்க நேரக்கட்டுப்பாடு.. தமிழ்நாடு அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
தமிழக அரசு மட்டுமே இந்த நேர கட்டுப்பாட்டை விதித்துள்ளதாக தவறான தகவல்கள் பரவியதாகவும் இது தமிழக அரசு போட்ட உத்தரவை கிடையாது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. உச்ச நீதிமன்றம் விதித்த நேர கட்டுப்பாடு என்பது இந்தியா முழுவதும் பொருந்தும் என்றும் சமூக ஊடகங்களில் தமிழக அரசு பிறப்பித்த உத்தரவு என்று வதந்தி பரப்பப்படுவதாகவும் தமிழக அரசின் தகவல் சரி பார்ப்பகம் தெரிவித்துள்ளது.
இதையும் படிங்க: அலற வைக்கும் ஆம்னி பேருந்துகள் டிக்கெட் கட்டணம்... பயணிகள் அதிர்ச்சி...!