• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Tuesday, October 06, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    “அடிக்க வர்றாங்க...” - தாராபுரம் எல்லையில் தவெகவினரை கதறவிட்ட திமுக, அதிமுகவினர்... நடந்தது என்ன?

    தாராபுரம் வீராச்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கோவையைச் சேர்ந்த தவெகவினர் நேற்று முதல் காரில் சுற்றித்திரிவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.
    Author By Amaravathi Tue, 06 Oct 2026 09:56:49 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    DMK and ADMK Members chase TVK persons at dharapuram

    தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் நிலையில், தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் தாராபுரம் பகுதியில் சுற்றித்திரிவதாகக் கூறி அதிமுகவினர் வாக்குவாதத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    தாராபுரம் வீராச்சிமங்கலம் உள்ளிட்ட பகுதிகளில் கோவையைச் சேர்ந்த தவெகவினர் நேற்று முதல் காரில் சுற்றித்திரிவதாக அதிமுகவினர் குற்றம்சாட்டியுள்ளனர்.

    இதுதொடர்பாக இருதரப்பினருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்ட காட்சிகள் வெளியாகியுள்ளன. அப்போது, தவெக தரப்பினர் தாங்கள் எந்தவித பிரச்சினையையும் ஏற்படுத்த வரவில்லை என்றும், சாலையோரம் அமர்ந்து சாப்பிட்டுக் கொண்டிருந்ததாகவும் தெரிவித்தனர்.

    இதையும் படிங்க: தவெகவை டாரு டாராக கிழித்து தொங்கவிட்ட வீடியோவில் இருப்பது நானா?... வெளியிட்டவர் குறித்து அதிர்ச்சி தகவலை சொன்ன சத்தியபாமா...!

    மேலும், தாங்கள் கோயம்புத்தூரைச் சேர்ந்தவர்கள் என்றும், அவசர தேவைக்காக அப்பகுதியில் காத்திருந்ததாகவும் அவர்கள் கூறினர்.

    தங்களது வாக்குச்சாவடியில் ஏற்கனவே பிரச்சினை இருப்பதாக தகவல் கிடைத்திருந்ததால், அங்கு சென்று பார்த்துவிட்டு வந்ததாகவும், தங்களுடன் தொடர்புடைய வாக்குச்சாவடியில் யாரும் இல்லை என்பதை உறுதி செய்த பின்னரே அங்கு வந்ததாகவும் தவெகவினர் தெரிவித்தனர்.

    மேலும், தங்களது வாகனங்கள் அனைத்தும் சோதனை செய்யப்பட்டதாகவும், வாகனங்களில் எவ்வித ஆவணமோ அல்லது சந்தேகத்திற்குரிய பொருட்களோ கிடைக்கவில்லை என்றும் அவர்கள் கூறினர்.

    தாங்கள் வாக்களிப்பதற்காகவே வந்ததாகவும், தங்களுக்கு எதிராக தேவையில்லாமல் பிரச்சினை ஏற்படுத்தப்படுவதாகவும் தவெகவினர் குற்றம்சாட்டினர்.

    இதனிடையே, அதிமுகவினர் தரப்பில், தேர்தல் நடைபெறும் தொகுதிக்குள் வெளியூரைச் சேர்ந்தவர்கள் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு தங்குவதற்கு விதிமுறைகள் உள்ளதா என கேள்வி எழுப்பப்பட்டது.

    மேலும், தங்களிடம் அடையாள அட்டை கேட்டபோது வழங்க மறுத்ததாகவும், இதுதொடர்பாக அதிகாரிகளிடம் தகவல் தெரிவிக்க முயன்றபோதும் உரிய பதில் கிடைக்கவில்லை என்றும் அதிமுகவினர் தெரிவித்தனர்.

    அந்த வாகனத்தை சோதனை செய்ய முயன்றபோது, வாகனத்தைத் திறக்க மறுத்ததாகவும் அவர்கள் குற்றம்சாட்டினர். வாகனத்திற்குள் கட்சி தொடர்பான பொருட்கள் மற்றும் கொடிகள் இருப்பதாக சந்தேகம் இருப்பதாகவும், போலீசார் உரிய முறையில் சோதனை செய்த பின்னரே உண்மை தெரியவரும் என்றும் தெரிவித்தனர்.

    மேலும், இடைத்தேர்தல் நடைபெறும் தொகுதியில் குறிப்பிட்ட நேரத்திற்குப் பிறகு வெளியூரைச் சேர்ந்தவர்கள் தங்குவதற்கு விதிமுறைகள் இருப்பதாகவும், அதன்படி அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அதிமுகவினர் வலியுறுத்தினர்.

    இதுகுறித்து செய்தியாளர் பூபதி வழங்கிய தகவலின்படி, தாராபுரம் சட்டமன்றத் தொகுதியில் தற்போது வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது. வீரமங்கலம் பகுதியில் உள்ள இரண்டு பள்ளிகளில் வாக்குப்பதிவு நடைபெற்று வருகிறது.

    அந்த வாக்குச்சாவடியில் இருந்து சுமார் 300 மீட்டர் தொலைவில், அந்தப் பகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்த வாகனம் ஒன்று தொடர்ந்து சுற்றித்திரிவதை அப்பகுதி மக்கள் கவனித்துள்ளனர்.

    இதையடுத்து, அந்த வாகனத்தைச் சுற்றி பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினர் திரண்டனர். விசாரணையில், அந்த வாகனத்தில் இருந்தவர்கள் கோவை மாவட்டத்தைச் சேர்ந்த தமிழக வெற்றிக் கழக நிர்வாகிகள் என்பது தெரியவந்ததாக கூறப்படுகிறது.

    இதனைத் தொடர்ந்து, அங்கு திரண்ட அதிமுக மற்றும் திமுகவினருக்கும், தவெக நிர்வாகிகளுக்கும் இடையே சிறிது நேரம் வாக்குவாதம் ஏற்பட்டது. தகவலறிந்து அங்கு வந்த போலீசார் இருதரப்பினரிடமும் பேச்சுவார்த்தை நடத்தினர். பின்னர், தவெக நிர்வாகிகள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

    இடைத்தேர்தல் வாக்குப்பதிவு நடைபெற்று வரும் சூழலில், தொகுதிக்கு சம்பந்தமில்லாத வெளிமாவட்டத்தைச் சேர்ந்தவர்கள் வந்ததாக எழுந்த குற்றச்சாட்டும், இதனால் ஏற்பட்ட வாக்குவாதமும் தாராபுரம் பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

    இதையும் படிங்க: “அந்த பயத்தைக் காட்டியிருக்கோம்...” - தாராபுரம் கள நிலவரம் குறித்து திமுக வேட்பாளர் சுகன்யா ஓபன் டாக்...!

    மேலும் படிங்க
    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    இந்திய கடலில் மீன்வளம் குறைவு... இலங்கை செல்லும் தமிழக மீனவர்கள்: உச்ச நீதிமன்றம் வேதனை! 

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு

    செய்திகள்

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    டிஎன்பிஎஸ்சி குரூப் 4 அறிவிப்பு வெளியானது: 6574 காலிப் பணியிடங்கள்... ஜனவரி 10-ல் தேர்வு!

    தமிழ்நாடு
    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    அரசு மருத்துவமனை மாத்திரை கவரில் இந்தி?: தவெக அரசு மீது டிஆர்பி ராஜா குற்றச்சாட்டு!

    தமிழ்நாடு
    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    விநாயகரை கரைத்தது போல் ஞானேஷ் குமாரை கரைக்க வேண்டும்: பிரகாஷ் ராஜ் ஆவேசம்!

    தமிழ்நாடு
    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    டெல்லியில் போராட்டம்: ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் உள்ளிட்ட இந்தியா கூட்டணி எம்பிக்கள் கைது!  

    இந்தியா
    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    ஓட்டு சதவீதம் குறைந்தால் மாறுமா முடிவு? மதுராந்தகம் - தாராபுரத்தில் யாருக்கு வெற்றி?

    தமிழ்நாடு
    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தண்ணீர் பஞ்சத்தை போக்க Cute CM எடுத்த நடவடிக்கை என்ன?: நயினார் நாகேந்திரன் ஆவேசம்!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share