வேலூரில் செங்கல் சேலையில் வேலை பார்த்து வந்த பெண்ணை திமுக கவுன்சிலர் அடித்து மண்டையை உடைத்ததாக குற்றம் சாட்டப்பட்டுள்ளது. இதனால் பலத்த காயமடைந்த பெண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
வேலூர் மாவட்டத்தைச் சேர்ந்தவர் பிரியா. இவர் அங்குள்ள திருவலம் பகுதியில் கிருபாகரன் என்பவருக்கு சொந்தமான செங்கல் சூளை ஒன்றில் பணிபுரிந்து வந்துள்ளார். தான் பணிக்கு வரவில்லை என பிரியா சொல்லியதாக தெரிகிறது.
இதனால் கிருபாகரனும் அவரது மனைவியும் திமுக கவுன்சிலருமான சுலோச்சனா என்பவரும் சண்டை போட்டதாக பிரியாவின் மகள் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அபாண்டமா பொய் பேசாதீங்க..! தூய்மை பணியாளர்கள் குற்றச்சாட்டை மறுத்த கே.என் நேரு..!
இதையடுத்து கடந்த பத்தாம் தேதி விடியற்காலை 4 மணி அளவில் பிரியாவின் வீட்டிற்கு சென்ற சுலோச்சனா தான் வைத்திருந்த இரும்புராடால் அவரை சரமாரியாக தாக்கியதாக கூறினார்.

தனது தாயை தாக்கி விட்டு சுலோச்சனா கிளம்பிய நிலையில், நடந்தவற்றை பிரியா அக்கம் பக்கத்தில் இருப்பவர்களிடம் தெரிவித்ததாகவும் அவர்கள் தனியார் மருத்துவமனையில் அனுமதித்ததாகவும் கூறினார்.
தங்களிடம் வசதி இல்லை என்பதால் அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு தனது தாயைக் கொண்டு வந்து சிகிச்சைக்காக சேர்த்துள்ளதாகவும், கொலை செய்வதற்காக சுலோச்சனா தாக்கியதாகவும் பிரியாவின் மகள் தெரிவித்தார்.
உயிருக்கு உத்தரவாதம் இல்லாமல் இருக்கும் நிலையில் எப்படி நாங்கள் வீட்டிற்கு பாதுகாப்பாக சென்று இருக்க முடியும் என்ற கேள்வியையும் அவர் முன் வைத்துள்ளார்.
இது தொடர்பாக போலீசில் புகார் அளிக்க சென்றபோது, ராகு காலமாக இருக்கிறது, எப்படி புகார் எடுப்பது எனக் கூறி அலைக்கழிப்பதாகவும் வேதனை தெரிவித்தார். போலீசார் புகார் எடுக்காத பட்சத்தில் மாவட்ட எஸ்பி அலுவலகத்திற்கு சென்று நீதி கேட்டுப் போராடுவோம் என்று கூறியுள்ளார்.
இதையும் படிங்க: ராகுலுக்கு எத்தன தடவ சொல்றது? நீங்கலாச்சு பொறுப்பா நடந்துக்கங்க ஸ்டாலின்.. நயினார் விமர்சனம்..!