த.வெ.க ஆட்சியில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வைக் கண்டித்து திமுக மகளிரணி சார்பில் விருதுநகரில் நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் பேசிய முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு, தமிழகத்தில் சட்டம்-ஒழுங்கு சீர்கேடு, விலைவாசி உயர்வு, மின் கட்டண உயர்வு உள்ளிட்ட பிரச்சினைகள் அதிகரித்து வருவதாகக் குற்றம்சாட்டினார்.
விருதுநகரில் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் த. வெ. க. ஆட்சியில் பெண்கள், குழந்தைகள் பாதுகாப்பின்மை மற்றும் விலைவாசி உயர்வை கண்டித்து தமிழகம் முழுவதும் திமுக மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. விருதுநகரில் தேசபந்து மைதானத்தில் திமுக வடக்கு மற்றும் தெற்கு மாவட்ட மகளிர் அணி சார்பில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வடக்கு மாவட்ட மகளிரணி அமைப்பாளர் சரஸ்வதி தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் கே கே எஸ் எஸ் ஆர் ராமச்சந்திரன், தங்கம் தென்னரசு,மற்றும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் ஆர்ப்பாட்டத்தின் போது த.வெ.க. அரசுக்கு எதிராக கண்டன முழக்கங்களை எழுப்பினர்.

இதில் முன்னாள் அமைச்சர் தங்கம் தென்னரசு பேசுகையில், தமிழகத்தில் நாளுக்கு நாள் சட்டம்-ஒழுங்கு நிலை கேள்விக்குறியாகி வருகிறது. சிறைச்சாலையை உடைத்து கைதிகள் தப்பிச் செல்லும் சம்பவங்கள் நடைபெறுகின்றன. பசும்பொன் போன்ற இடங்களுக்கு வருகை தரும் தலைவர்களுக்கு உரிய பாதுகாப்பு அளிப்பதிலும் அரசு தவறி வருகிறது என தெரிவித்தார். மறுபுறம், விலைவாசி விண்ணை முட்டும் அளவுக்கு உயர்ந்து வருகிறது. அதற்குப் போட்டியாக மின் கட்டணமும் உயர்ந்து கொண்டிருக்கிறது.
இதையும் படிங்க: அடுத்து சேலமா? பாளையங்கோட்டையா?... Inky Pinky Ponky போடும் கைதிகள்... விஜய் அரசை விளாசிய உதயநிதி...!
ஏழை, எளிய மக்கள் குறிப்பாக பெண்கள் பாதுகாப்பற்ற சூழலை எதிர்கொண்டு வருகின்றனர். இத்தகைய பிரச்சினைகளுக்கு எதிராகக் குரல் கொடுக்கக்கூடிய ஒரே தலைவராக திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் விளங்கி வருகிறார். அவரது தலைமையில், கழகத் துணைப் பொதுச்செயலாளர் கனிமொழியின் வழிகாட்டுதலின்படி மகளிரணி தனது படையை களமிறக்கி இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறது என கூறினார். இந்த ஆர்ப்பாட்டத்தின் குரல் தமிழகம் முழுவதும் எதிரொலித்து, மீண்டும் நல்லதொரு சூழல் உருவாக மக்களின் குரலாக ஒலிக்க வேண்டும் என கூறி உள்ளார்.
இதையும் படிங்க: அன்பில், நேருவை தொடர்ந்து அடுத்த டார்கெட் யார்? லிஸ்டில் திமுகவின் 3 Ex.அமைச்சர்கள்.. விஜய் அதிரடி பிளான்!