சென்னையில் நடைபெற்ற திமுக நிகழ்ச்சியில் முதலமைச்சர் விஜய் குறித்து தரக்குறைவாகப் பேசியதாகக் கூறப்படும் வழக்கில், திமுக கவுன்சிலர் சுதா தீனதயாளனுக்கு எஸ்பிளனேட் காவல்நிலையம் சம்மன் அனுப்பியுள்ளது. இதையடுத்து அவர் விசாரணைக்கு ஆஜராகும்படி அழைக்கப்பட்டுள்ளார்.கடந்த அக்டோபர் 7ஆம் தேதி பாரிமுனையில் உள்ள ராஜா அண்ணாமலை மன்றத்தில் திமுக மகளிரணி மற்றும் மகளிர் தொண்டரணி சார்பில் முப்பெரும் விழா பொதுக்கூட்டம் நடைபெற்றது.
அந்த நிகழ்ச்சியில் சென்னை மாநகராட்சியின் 95வது வார்டு கவுன்சிலரும் திமுக மகளிரணி நிர்வாகியுமான சுதா தீனதயாளன் உரையாற்றினார். அப்போது முன்னாள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் குறித்து விமர்சனம் செய்ததாகக் கூறி முதலமைச்சர் விஜயை விமர்சித்தார். அவர் விஜயை ‘நாய்’ என்று பலமுறை குறிப்பிட்டு, வயது வித்தியாசத்தைச் சுட்டிக்காட்டி அவரது தோற்றத்தை இறந்த உடலுடன் ஒப்பிட்டுப் பேசியதாக வீடியோக்கள் வெளியாகின. மேலும் சமூக ஊடக ரீல்கள் மூலம் வெற்றி பெற்றதாகவும் வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என்றும் குற்றம்சாட்டியிருந்தார்.

நிகழ்ச்சியில் எம்பி கனிமொழி மற்றும் சென்னை மேயர் பிரியா ராஜன் ஆகியோர் மேடையில் இருந்தனர். சுதாவின் பேச்சு நடைபெற்றபோது மேயர் சிரித்ததாகவும், கனிமொழி அசௌகரியமாக இருந்ததாகவும் கூறப்படுகிறது. திமுக தரப்பில் இருந்து உடனடியாக கண்டனம் தெரிவிக்கப்பட்டதாகவும், கனிமொழி மேடையில் அமைதியாக இருக்கச் சொன்னதாகவும் சில தகவல்கள் வந்தன. இருப்பினும் இந்த வீடியோ சமூக ஊடகங்களில் பரவலாகப் பரவியதையடுத்து தமிழக வெற்றிக் கழகத்தினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதையும் படிங்க: கடன் தேவை எவ்வாறு குறைந்தது?... பாயிண்ட்களை அடுக்கி தவெக அரசுக்கு செக் வைத்த தங்கம் தென்னரசு...!
தவெக நிர்வாகி உதயகுமார் எஸ்பிளனேட் காவல்நிலையத்தில் புகார் அளித்தார். முதலமைச்சர் மீது அவதூறாகவும் தரக்குறைவாகவும் பேசியதாகக் குறிப்பிட்டு நடவடிக்கை கோரினார். புகாரின் அடிப்படையில் போலீசார் சுதா தீனதயாளன் மற்றும் நிகழ்ச்சி ஏற்பாட்டாளர் முரளி ஆகியோர் மீது மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இப்போது விசாரணைக்கு ஆஜராகுமாறு சுதாவுக்கு சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: முதல்வரையே அசிங்கப்படுத்துவதா.? பொறுப்பு வேணாமா..? கொந்தளித்த அமைச்சர் ஜெகதீஸ்வரி..!