திமுக தலைவராக மு. கருணாநிதி பொறுப்பேற்ற நாள் ஜூலை 27, 1969 ஆகும். இந்த நாளில், திராவிட முன்னேற்றக் கழகத்தின் (திமுக) முதல் தலைவரான சி.என். அண்ணாதுரை மறைவுக்குப் பிறகு, கருணாநிதி கட்சியின் தலைவராகப் பொறுப்பேற்றார். இது திமுக வரலாற்றில் ஒரு முக்கிய தருணமாகக் கருதப்படுகிறது.
ஏனெனில் கருணாநிதி பின்னர் ஐந்து முறை தமிழ்நாடு முதலமைச்சராகவும், கட்சியை 50 ஆண்டுகளுக்கு மேல் வழிநடத்திய தலைவராகவும் பணியாற்றினார். இந்த நிலையில் கலைஞர் கருணாநிதிக்கு அன்பில் மகேஷ் பொய்யாமொழி புகழாரம் சூட்டியுள்ளார்.
தி.மு.க. எனும் மாபெரும் இயக்கத்தின் தலைவராக முத்தமிழ் அறிஞர் டாக்டர் கலைஞர் அவர்கள் பொறுப்பேற்ற நாள் இன்று என தெரிவித்தார். கழகத்தின் தலைவராக 50 ஆண்டுகளை எட்டிய பின்னரும் தொண்டர்களில் ஒருவராக களம் கண்டவர் என்றும் ஆணையிடும் தலைவராக மட்டுமல்லாமல், தலைவருக்கே ஆணையிடும் ஜனநாயகத் தொண்டர்களையும் அவர் உருவாக்கி வைத்துள்ளார் எனவும் கூறினார்.
இதையும் படிங்க: சோழ தேசத்தில் முப்பெரும் விழா! வேட்டி, சட்டையில் கலக்கலாக வந்த பிரதமர்…

நெருக்கடி நிலையை நெஞ்சுறுதியோடு எதிர்த்து நின்ற தலைவர். வெற்றி தோல்விகளுக்கு மத்தியில் தனது கரகரத்த குரலால் “என் உயிரினும் மேலான அன்பு உடன்பிறப்பே…” எனச் சொல்லி அன்பால் தொண்டர்களைக் கட்டிப்போட்டிருந்த கழகத்தின் காவலர் என்று புகழ்ந்தார்.
இந்தியாவின் அரசியல் வரலாற்றில் தவிர்க்க முடியாத தலைவர் கலைஞர் அவர்களின் வழியில், இந்திய ஒன்றியத்திற்கே திசை காட்டும் கழகத் தலைவர் ஸ்டாலின் தலைமையில் போராடுவோம்.,வெல்வோம் என அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: விலைமதிப்பில்லா உயிர்களை காக்க மனசு வரலையா? கடல் அரிப்பு நிகழ்வை சுட்டிக்காட்டி சீமான் விளாசல்