திமுக ஆட்சி அமைந்ததிலிருந்து பல்வேறு வாக்குறுதிகளை நிறைவேற்றவில்லை என எதிர்கட்சிகள் தொடர்ந்து குற்றம் சற்று வருகின்றன. குறிப்பாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் திமுக நிறைவேற்றாத வாக்குறுதிகள் பட்டியலை வெளியிட்டு அடுக்கடுக்கான கேள்விகளை எழுப்பி வருகிறார். வாக்குறுதிகளை ஒவ்வொன்றாக பட்டியலிட்டு சொன்னீர்களே செய்தீர்களா என்று கேள்வி எழுப்பி வருகிறார். இந்த நிலையில் பூங்கா, மருத்துவமனை போன்ற வாக்குறுதிகளை திமுக நிறைவேற்ற வில்லை என்றும் அவற்றை செய்தீர்களா என்ற கேள்வியையும் எழுப்பி உள்ளார்.
திண்டுக்கல் மாவட்டத்தில் தோல் பொருட்கள் பூங்கா, கொடைக்கானலில் மண்டலத் தோட்டக்கலை ஆய்வு மையம் மற்றும் பல்நோக்கு மருத்துவமனை, பழனி மற்றும் கொடைக்கானல் இடையே கேபிள் கார் வசதி ஆகியவை அமைத்துத் தரப்படும் என திமுக வாக்குறுதி அளித்ததாக தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் குறிப்பிட்டுள்ளார். அவற்றை செய்தீர்களா என்று முதலமைச்சர் ஸ்டாலினுக்கு கேள்வி எழுப்பி உள்ளார்.

உலகப்புகழ்பெற்ற சுற்றுலாத் தலமான கொடைக்கானலையும் அதுசார்ந்த திண்டுக்கல் மாவட்டத்தையும் கைகழுவி விட்டுவிட்டு, உலக நாடுகளைச் சுற்றிப் பார்ப்பதில் என்ன பயன் என்று கேட்டுள்ளார். உள்நாட்டில் உள்ள வியாபாரத் தளங்களை மேம்படுத்துவதை விட்டுவிட்டு வெளிநாட்டு முதலீடுகளை நம்பி என்ன பயன் என்றும் மக்களை ஏமாற்றி மக்கள் வரிப்பணத்தை இப்படி சுரண்டுவதற்குப் பெயர் தான் நாடு போற்றும் நல்லாட்சியா எனவும் அடுக்கடுக்கான கேள்விகளை முன் வைத்துள்ளார்.
இதையும் படிங்க: காற்றில் தொடங்கி கழிவறை வரை ஊழல்... சிபிஐ விசாரணை கோரும் நயினார்...!
ஆட்சி முடிய இன்னும் ஒரு சில மாதங்களே உள்ள நிலையில் கொடுத்த வாக்குறுதிகளில் பாதியையாவது நிறைவேற்ற வேண்டும் என்ற எண்ணமிருக்கிறதா என்று நயினார் நாகேந்திரன் சாடியுள்ளார். தேர்தலில் வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கில் பொய்களைப் பேசி ஊரை ஏமாற்றி, தமிழக மக்களுக்கு இப்படி நம்பிக்கைத் துரோகம் இழைப்பதற்குப் பெயர் தான் திராவிட மாடல் அரசா இன்று முதலமைச்சருக்கு நயினார் நாகேந்திரன் கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: அவர் உயிருக்கு ஆபத்து..! விஜய்க்கு ஃபுல் சப்போர்ட்... விமர்சனங்களை தூளாக்கிய நயினார்..!