திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றலாம் என வழக்கின் தீர்ப்பு இரு நீதிபதிகள் அடங்கிய அமர்வில் இன்று வெளியானது. தீர்ப்பை நீதிபதிகள் ஜெயச்சந்திரன் மற்றும் ராமகிருஷ்ணன் ஆகியோர் வாசித்தனர். கடந்த 18ஆம் தேதி அனைத்து தரப்பு வாதங்களும் நிறைவடைந்த நிலையில் தீர்ப்பு வெளியாகி உள்ளது. பொது அமைதி பாதிக்கும் என்ற அரசு தரப்பின் வாதத்தை ஏற்றுக் ஏற்றுக்கொள்ள முடியவில்லை என நீதிபதிகள் தெரிவித்தனர்.
தமிழக அரசின் வாதம் தவறானது என்றும் கருதினர். மலை உச்சியில் உள்ள தூண் தர்காவிற்கு சொந்தமானது என்ற வாதமும் தவறானது என்று தெரிவிக்கப்பட்டது. அனைத்து இந்துக்களும் பார்க்க வேண்டும் என்றுதான் உச்சியில் தீபம் ஏற்றப்படுகிறது என்று கூறினார். பொது அமைதி பாதிக்கப்படும் என அரசுக்கு வருவது யூகத்தின் அடிப்படையிலானது என்றும் கூறப்பட்டது. தீபத்தூண் தேவஸ்தானத்திற்கு சொந்தமான இடத்திலேயே உள்ளது என்று தெரிவித்தனர்.

திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும் என்று அதிரடி உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. திருப்பரங்குன்றம் தீபத்தூணில் தீபமேற்ற தடைவிதிக்கக் கோரும் திமுக அரசின் மேல்முறையீட்டு மனுக்களை நிராகரித்து, தீபமேற்ற அனுமதித்து, உயர்நீதிமன்ற மதுரைக் கிளை மீண்டும் ஒருமுறை நீதியை நிலைநாட்டியுள்ளது மிகுந்த மகிழ்ச்சியளிக்கிறது என தமிழக பாஜக தலைவர் நயினார் நாகேந்திரன் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: நான்கரை ஆண்டுகளில் ரூ. 4 லட்சம் கோடி ஊழல்… லிஸ்ட் போட்டு கொடுத்து இருக்கோம்… ஆளுநரை சந்தித்த இபிஎஸ் விளக்கம்…!
சட்டம் ஒழுங்கு சீர்கெடும் என்னும் போலி பிம்பத்தைத் தங்கள் சொந்த வசதிக்கு ஏதுவாகப் பயன்படுத்துவது தவறானது எனத் திமுக அரசிற்கு சம்மட்டியடி கொடுத்து, தீபத்தூண் என்றும் திருப்பரங்குன்றம் சுப்பிரமணிய சுவாமி திருக்கோவிலுக்கே உரித்தானது என்று ஆணித்தரமாக நிலைநாட்டிய நீதிமன்ற அமர்வுக்கு எனது உளமார்ந்த நன்றிகள் என்று கூறினார். தொடர்ந்து பலமுறை நீதிமன்றத்திடம் குட்டு வாங்கியும் திருந்தாமல், திரும்பத் திரும்ப இந்து விரோத விஷத்தை உமிழ்ந்து கொண்டே இருக்கும் திமுக அரசு தனது அராஜகக் கொட்டத்தாலேயே கோட்டையிலிருந்து துரத்தியடிக்கப்படும் இன்று உறுதிப்பட தெரிவித்தார்.
இதையும் படிங்க: இசையைப் போலவே நீங்களும்... ஏ.ஆர். ரகுமானுக்கு பிறந்தநாள் வாழ்த்து சொன்ன முதல்வர் ஸ்டாலின்...!