தமிழக ஆளுநர் ரவியை அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சந்தித்தார். பின்னர் செய்தியாளர்களை சந்தித்து பேசிய எடப்பாடி பழனிச்சாமி, 2021 ஆம் ஆண்டு முதல் திமுக ஆட்சி நடந்த ஊழல்கள் பற்றிய பட்டியலை ஆளுநரிடம் வழங்கியிருப்பதாக தெரிவித்தார். திமுகவின் ஊழல் நிறைந்த ஆட்சியில் பல்வேறு துறைகளில் அடிக்கப்பட்ட ஊழலின் விவரங்களை ஆளுநரிடம் வழங்கி திமுக அரசு செய்த ஊழல்கள் அனைத்திற்கும் முழுமையான உரிய ஆதாரம் உள்ளதால் முழு விசாரணை நடத்த வேண்டும் என்று வலியுறுத்தி உள்ளதாக கூறினார்.
கடந்த 56 மாதங்களாக வெளிப்படைத்தன்மை இல்லாமல் ஒரு கார்ப்பரேட் நிறுவனம் போல் அதிகாரத்தின் உச்சத்தில் இருக்கும் திமுக குடும்பம் கோடிக்கணக்கில் கொள்ளை அடித்து தமிழ்நாட்டை மிகப் பெரிய கடன் சுமையில் தள்ளி உள்ளது என்றும் இதனை பொறுப்புள்ள எதிர்க்கட்சியாக சுட்டிக்காட்டி இருப்பதாக கூறினார். திமுக கடந்து 56 மாதங்களில் வருடத்திற்கு ஒரு லட்சம் கடன் வாங்கி தமிழ்நாட்டில் மிக கேவலமாக நிர்வாகம் செய்து கூடுதலாக சுமார் 4 லட்சம் கோடி கடனை அதிகரித்து இருப்பது தான் திமுக அரசின் சாதனை என்று தெரிவித்தார்.
ஆட்சிக்கு வந்ததிலிருந்து திமுக அரசு கொள்ளையடித்த முப்பதாயிரம் கோடி ரூபாயை சபரீசனும் உதயநிதியும் என்ன செய்வதென்று தெரியாமல் தவித்து வருவதாக அப்போதைய நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தது அனைவரும் அறிவோம் என்று கூறினார். ஒரு ஆண்டுக்கு இவ்வளவு என்றால் நான்கரை ஆண்டுகளில் எவ்வளவு இருக்கும் என்று கணக்கெட்டு பாருங்கள் என்று தெரிவித்தார். ஊழல் செய்வதை தவிர தமிழக மக்களுக்கு எந்த நன்மையும் திமுக செய்யவில்லை என்று கூறினார்.
இதையும் படிங்க: பட்டியலினத்தவர் தனித் குடித்தனம் போனா கான்கிரீட் வீடு..! இபிஎஸ் கொடுத்த வாக்குறுதி..!
விஞ்ஞான முறையில் ஊழல் செய்யக்கூடிய கட்சி திமுக என்றும் அந்த வகையில் அரசின் பல்வேறு துறைகளில் மிக அதிக அளவில் ஊழல் செய்து தமிழக மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கி இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டினார். துரை ரீதியாக எவ்வளவு ஊழல் நடைபெற்று இருக்கிறது என்பதை சுட்டிக்காட்டி இருப்பதாகவும் நகராட்சி துறை, எரிசக்தி துறை, கலால் வரி துறை, பத்திரப்பதிவுத்துறை, நெடுஞ்சாலைத்துறை, தொழில்துறை, சென்னை மாநகராட்சி, பள்ளி கல்வித்துறை, மேலாண்மை துறை என பல்வேறு ஊழல்கள் நடைபெறுவதாக சுட்டிக்காட்டினார்.
இப்படி பல்வேறு துறைகளில் கொள்ளையடித்து திராவிட முன்னேற்றக் கழகம் சட்டம் ஒழுங்கு சரியில்லாமல் மோசமான நிலைக்கு தள்ளி இருப்பதாக தெரிவித்து உள்ளார். நான்கரை ஆண்டுகளில் சுமார் 4 லட்சம் கோடி பல்வேறு துறைகளில் ஊழல் நடந்திருப்பதாக தெரிவித்தார். இதுகுறித்து ஓய்வு பெற்ற நீதிபதி தலைமையில் விசாரிக்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: இந்தாங்க லிஸ்ட்... அமித் ஷா வருகை எதிரொலி... ஆளுநர் ரவியை சந்திக்கும் EPS...!