தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே உள்ள நிலையில், அரசியல் கட்சிகள் தேர்தல் பணிகளை தீவிரப்படுத்தி வருகிறது. அந்த வகையில் ஆளுங்கட்சியாக உள்ள திமுக தற்போதுள்ள கூட்டணியை தக்கவைத்து தேர்தலை எதிர்கொள்ள காய் நகர்த்தி வருகிறது. அதிமுக முதல் கட்டமாக பாஜகவோடு கூட்டணியை உறுதி செய்துள்ளது. அடுத்ததாக பாமக, தேமுதிக உள்ளிட்ட கட்சிகளை இணைக்க திட்டமிட்டு வருகிறது. நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான், வழக்கம் போல தனித்து தான் போட்டி என அறிவித்துவிட்டார்.
இதனிடையே 2026ஆம் ஆண்டு நடைபெறவுள்ள சட்டமன்ற தேர்தல் தான் தனது இலக்கு என அறிவித்துள்ள விஜய் இதற்கான பணிகளை தீவிரம் காட்டி வருகிறார். அந்த வகையில் சென்னையில் நேற்று நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

சட்டமன்றத் தேர்தலில் தவெக-வின் முதலமைச்சர் வேட்பாளராக விஜய் அறிவிக்கப்பட்டார். ஆகஸ்ட் 2025-ல் தவெக-வின் இரண்டாவது மாநில மாநாடு நடைபெறும். செப்டம்பர் முதல் டிசம்பர் 2025 வரை தமிழகம் முழுவதும் விஜய் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சிகள் நடைபெறும். தமிழ்நாடு முழுவதும் 12,500 கொள்கை விளக்க கூட்டங்கள் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டது.
இதையும் படிங்க: அதிமுக கிடையாது! பாஜக தான் மெயின் டார்கெட்! இது ஸ்டாலின் பார்முலா! சூடுபிடிக்கும் தேர்தல் களம்..!
எனவே தமிழகத்தில் 4 முனை போட்டி என்பது உறுதியாகி உள்ளது. இதனையடுத்து திமுக, அதிமுக, நாதக, தவெக கட்சிகள் தங்களது தேர்தல் பணியை முடுக்கிவிட்டுள்ளது. 2026-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் புதிய வியூகங்கள் வகுத்து வாக்காளர்களை சந்திக்க வேண்டும் என்பதில் முன்னணி கட்சிகள் தீவிரமாக உள்ளன.
இந்த நிலையில் திமுக கூட்டணியில் விடுதலை சிறுத்தைகள் கட்சி உள்ள நிலையில், பாமகவும் வர வேண்டும். இவ்விரு கட்சிகளும் ஏற்கனவே ஒரே கூட்டணியில் இருந்துள்ளது என தமிழக காங்கிரஸ் தலைவர் செல்வப்பெருந்தகை தெரிவித்தார்.

இதற்கு, விடுதலை சிறுத்தைகள் கட்சி தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டது. இந்த சூழ்நிலையில், அக்கட்சியின் துணை பொதுச்செயலர் வன்னி அரசு, காங்கிரசை விமர்சித்து, தனியார் 'டிவி' நேர்காணலில் பேசிய வீடியோவை, விடுதலை சிறுத்தைகள் கட்சி நிர்வாகிகள் சமூக வலைதளத்தில் அதிகம் பகிர்ந்து வருகின்றனர். அதில், வன்னி அரசு கூறியிருப்பதாவது ; திமுக கூட்டணியில், திமுகவுக்கு அடுத்து விசிக தான் வலிமையான கட்சி.
அதனால், எங்களுக்கு அதிக இடங்களை ஒதுக்கும்படி கேட்கிறோம். இப்படி கேட்பது என் போன்றோரின் விருப்பம். இதனால், கூட்டணி கட்சியை குறைத்து மதிப்பிடவில்லை. தமிழகத்தில் வலுவான கட்சி குறித்த கணக்கெடுப்பை நடத்துங்கள். எந்த கட்சி வலிமையான கட்சி என்று கேளுங்கள். காங்கிரசுக்கு தமிழகத்தில் என்ன இருக்கிறது? அகில இந்திய அளவில் ராகுல் தலைவராக, பாஜவுக்கு மாற்றாக இருக்கிறார். தமிழகத்தில் அமைப்பு ரீதியாக நாங்கள் வலிமையாக இருக்கிறோம். காங்கிரசை விட எங்களுக்கு கூடுதல் இடங்களை கொடுங்கள்.

பா.ம.க., - வி.சி.க., ஒரே கூட்டணியில் சேர வேண்டும் என்பதை கூற, செல்வப்பெருந்தகைக்கு எவ்வித தார்மீக உரிமையும் இல்லை. அவர், வி.சி.க.,யை சார்ந்தவரோ, தலைவரோ இல்லை. அவர் கட்சி குறித்து வேண்டுமானால் பேசட்டும். அவர், இன்று ஒரு கட்சியில் இருப்பார்; நாளை மற்றொரு கட்சிக்கு சென்று விடுவார். எங்கள் தலைவர் திருமாவளவன் வெளிப்படையாக அறிவித்து விட்டார். எங்கள் நிலைப்பாட்டை தெளிவாகக் கூறியிருக்கிறோம். பா.ஜ., - பா.ம.க., இடம்பெறும் கூட்டணியில், நாங்கள் ஒருபோதும் இருக்க மாட்டோம் என அவர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: ஓரணியில் தமிழ்நாடு: வீடு வீடாக சென்று பரப்புரையை தொடங்கியது திமுக..!