தமிழ்நாட்டில் நிலவும் மின்வெட்டு விவகாரத்தை முன்னிறுத்தி முன்னால் அமைச்சர் செந்தில் பாலாஜி செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, யூனிட் மின்சாரத்தை 35 ரூபாய்க்கு வாங்க தமிழக அரசு அறிவித்த நிலையில் இந்த செய்தியாளர் சந்திப்பை நடத்தினார். தமிழ்நாட்டில் மின்வெட்டைப் பற்றி பேசாத நாட்களே இல்லை என்று குறிப்பிட்டார். அரசு நிகழ்ச்சி, அமைச்சர்கள் பங்கிருக்கும் நிகழ்வு என தமிழகத்தில் எப்போதும் மின்வெட்டு ஏற்படாத நாலே இல்லை என்று தெரிவித்துள்ளார்.
தலைமைச் செயலகத்திலேயே மின்வெட்டு ஏற்படும் வகையில் இன்றைய ரீல்ஸ் ஆட்சியின் மோசமான நிலை நிலவுவதாக குறிப்பிட்டுள்ளார். மக்களுக்கு ஏற்படும் பிரச்சனை குறித்து கவலை இல்லாமல் அமைச்சர் உட்பட அனைவரும் இருப்பதாக செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

கேள்வி கேட்டால் பஞ்சாபில் பவர் கட் என மோசமான பதில் கூறுகிறார் மின்சாரத் துறை அமைச்சர் நிர்மல் குமார் என்றும் தெரிவித்தார். திமுக ஆட்சியில் ஆண்டுதோறும் மின் தேவை அதிகரித்த நிலையிலும் சமாளித்து மின்விநியோகம் செய்யப்பட்டதாகவும் செந்தில் பாலாஜி தெரிவித்தார். ஐந்து மாதத்தில் மின்விநியோகம் சீரமைப்பதற்கான நடவடிக்கையை தமிழக வெற்றி கழக அரசு எடுக்கவில்லை எனவும் தெரிவித்தார்.
இதையும் படிங்க: "காமாட்சி விளக்கும், புடவையும்"..! தூய சக்தியின் தூய அரசியலை பாருங்க..! செந்தில் பாலாஜி விளாசல்.!!
தொடர்ந்து பேசிய முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி, மின்சாரத் துறை அமைச்சர் அவர் துறை தவிர அனைத்து துறைகளுக்கும் பதில் சொல்லி விளக்கம் தருவார் என்று விமர்சனம் செய்துள்ளார். மின்சாரத்தை முழுக்க முழுக்க வெளிச்சந்தையில் தமிழக வெற்றிக்கான அரசு வாங்குவதாகவும் குறிப்பிட்டு பேசினார். மார்ச் - மே மாதங்களில் உச்சபட்ச தேவையை முன்னேற்பாடாக நவம்பர், டிசம்பரிலேயே டெண்டர் போடுவது வழக்கம் என தெரிவித்தார். தமிழக வெற்றிக்கழக அரசின் ஆட்சியில் மின்சாரம் சொந்த உற்பத்தி 34 சதவீதமாக குறைக்கப்பட்டுள்ளது என்றார்.
இதையும் படிங்க: வராத கரெண்டுக்கு "TWO PHASE" விளக்கம்..! அமைச்சரின் ஜெனரேட்டர் கதை... கிண்டலடித்த செந்தில் பாலாஜி..!!