தெரு நாய்களை காப்பகங்களில் வைக்கும் உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு கடும் சர்ச்சையை ஏற்படுத்தியது. பிறகு தீர்ப்பு திருத்தி அமைக்கப்பட்ட நிலையில் கூட தெருநாய்கள் தேவையா இல்லையா என்று வாதங்கள் நடந்து வருகிறது. தெரு நாய்கள் வேண்டாம் என்பவர்கள் பொதுவாக முன் வைக்கும் கருத்து என்னவென்றால், மனித உயிர்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது என்பதுதான். இருப்பினும் தெருநாய்கள் எல்லாமே அப்படி கிடையாது என்றும் ஒரு பக்கம் கூறி வருகின்றனர்.
தெரு நாய்களை ஒழிப்பது தங்கள் நோக்கம் அல்ல இருப்பினும் மனித உயிர்களுக்கு அச்சுறுத்தல் ஏற்படுகிறது என்பதை நாம் கருத்தில் கொள்ள வேண்டும் என்பதே பொதுவான கோரிக்கையாக உள்ளது. தெரு நாய்கள் தங்களுக்கு பாதுகாப்பு என்று ஒரு தரப்பினரும் தெரு நாய்களால் வெளியில் வரவே முடியவில்லை என்று மற்றொரு தரப்பினரும் வாதிட்டு வருகின்றனர்.

இப்படி தெருநாய்கள் பிரச்சனை போய்க்கொண்டிருக்கும் சூழ்நிலையில், வளர்த்த நாய்களாலும் சில பிரச்சனைகள் ஏற்படுகிறது. எனவே வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் கட்டாயம் என சென்னை மாநகராட்சி உத்தரவிட்டுள்ளது. சென்னையில் வளர்ப்பு நாய்களுக்கு மைக்ரோ சிப் பொருத்துவது கட்டாயம் என்றும், சிப் பொருத்தாத நாய் உரிமையாளர்களுக்கு 3,000 ரூபாய் அபராதம் விதிக்கப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: ஜெர்மன் தொழில்நுட்பத்தில் வேலை நடக்குது! சென்னை மாநகராட்சி சொன்ன ஹாப்பி நியூஸ்…
சென்னையில் நாய்கள் வளர்க்க புதிய விதிகள் அடுத்த மாதம் அமலுக்கு வர உள்ளதாகவும், நாய்களை வெளியே அழைத்து செல்லும்போது வாய்மூடி கட்டாயம் என்றும் கூறியுள்ளது. நாய்கடி சம்பவங்களை கட்டுப்படுத்த சென்னை மாநகராட்சி இந்த முடிவு எடுத்துள்ளது.
இதையும் படிங்க: நல்லா பாருங்க கை கட்டி இருக்குதா? மழைநீர் வடிகால் தொட்டியில் கிடந்த பெண் சடலம்! சந்தேகத்தை கிளப்பிய அண்ணாமலை