சென்னை சூளைமேட்டில் மழை நீர் வடிகால் தொட்டியில் தவறி விழுந்து பெண் ஒருவர் உயிரிழந்ததாக கூறப்படுவதாகவும் ஆனால் அது பழனியில் வடிவால் தொட்டி அல்ல என்றும் வண்டல் தொட்டி என்று புதுவிதமான விளக்கத்தை சென்னை மாநகராட்சி கொடுப்பதாகவும் தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலை தெரிவித்தார்.
சென்னை சூளைமேடு வீரபாண்டி நகரில், சரியாக மூடாமல் மழைநீர் வடிகால் தொட்டியை மட்டப்பலகையை வைத்து மூடியிருந்ததாகவும், தெரியாமல் அதில் கால் வைத்த பெண், மட்டப்பலகை உடைந்து தவறி விழுந்து இறந்து விட்டதாக சொல்லப்படும் நிலையில், இறந்த பெண்ணின் வாய் மற்றும் கைகள் கட்டப்பட்டிருந்ததாக மாநகராட்சி தரப்பில் கூறப்படுவதாகவும் அண்ணாமலை தெரிவித்தார்.

அந்தப் புகைப்படங்களைப் பார்த்தால், அவரது துப்பட்டா, கையில் சிக்கியிருப்பது போலத் தான் தெரிகிறதே தவிர, கட்டப்பட்டது போலத் தெரியவில்லை என்று அண்ணாமலை சந்தேகத்தை எழுப்பினார். கடந்த சில தினங்களுக்கு முன்பாக, பணிக்குச் சென்ற தூய்மைப் பணியாளர் சகோதரி ஒருவர், தேங்கியிருந்த தண்ணீரில் மின்சாரம் தாக்கி உயிரிழந்திருந்தார். இப்போது மற்றுமொரு பெண் உயிரிழந்திருக்கிறார் என்றும் சென்னையில், கடந்த நான்கு ஆண்டுகளாக மழைநீர் வடிகால் பணிகள் நடந்து கொண்டிருக்கும் நிலையில், அமைச்சர்களும், சென்னை மேயரும், ஆளுக்கொரு சதவீதம் பணிகள் நிறைவு பெற்று விட்டது என்று கதை சொல்லிக் கொண்டிருப்பதாக விமர்சித்தார்.
இதையும் படிங்க: ஒப்பந்தம் போட்டுட்டா எல்லாம் வந்துடுமா? திமுகவை பந்தாடிய இபிஎஸ்
ஒவ்வொரு உயிர்ப்பலி ஏற்படும்போதும், ஏதேதோ கதைகள் சொல்லி மடைமாற்றுவதில்தான் குறியாக இருக்கிறதே தவிர, தவற்றை ஒப்புக்கொண்டு, தீர்வுகளை ஏற்படுத்துவதில் அக்கறை இல்லாமல் திமுக அரசு இருப்பதாக குற்றம் சாட்டினார். உடனடியாக, உயிரிழந்த பெண் குறித்த விவரங்களைக் கண்டறிந்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், மழை நீர் வடிகால் பணிகள் நடைபெறும் இடங்களில் எல்லாம், பொதுமக்களுக்கு உரிய பாதுகாப்பை உறுதி செய்ய வேண்டும் என்றும் வலியுறுத்தியுள்ளார்.
இதையும் படிங்க: கடந்த 4 வருடத்தில் என்னென்ன செஞ்சிருக்கோம் தெரியுமா? திமுக அரசின் திட்ட செயலாக்கம் குறித்த பிரஸ்மீட்…