தமிழ்நாட்டில் வடகிழக்குப் பருவமழை தொடங்கி, பல்வேறு மாவட்டங்களில் தொடர்ந்து கனமழை முதல் மிக கனமழை வரை பெய்து வருகிறது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளது. அதேபோன்று, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் கேரளக் கடலோரப் பகுதிகளில் நிலவிய காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகத் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
வடகிழக்குப் பருவமழை தொடங்கி, தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் சூழலில், தென்கிழக்கு மற்றும் அதை ஒட்டிய மத்திய கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில் நிலவிய வளிமண்டலச் சுழற்சி காரணமாகக் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி உருவானது.
இதையும் படிங்க: வங்கக்கடலில் நாளை உருவாகிறது காற்றழுத்த தாழ்வு பகுதி! இந்திய வானிலை மையம் எச்சரிக்கை!
இந்நிலையில், இந்தக் காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி இன்று காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் நேற்று தெரிவித்திருந்தது. தற்போது அது வலுப்பெற்றுள்ளது.
தொடர்ந்து மேற்கு-வடமேற்குத் திசையில் நகரும் இந்த அமைப்பு, நாளை ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெறும் என்றும், அதைத் தொடர்ந்து திங்கட்கிழமை புயலாக மாறக்கூடும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேற்கு மத்திய வங்கக்கடல் பகுதியில் இந்தப் புயல் உருவாக வாய்ப்புள்ளதாகவும் கூறப்பட்டுள்ளது.
மேலும், இந்தப் புயல் வடக்கு ஆந்திரப் பிரதேசம் மற்றும் அதை ஒட்டிய தெற்கு ஒடிசா பகுதிகளில் கரையைக் கடக்க வாய்ப்புள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், தென்கிழக்கு வங்கக்கடல் பகுதியில் உருவாகியிருந்த குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதி தற்போது காற்றழுத்தத் தாழ்வு மண்டலமாக வலுப்பெற்றுள்ளதாகவும், அரபிக்கடல் பகுதியில் உருவாகியுள்ள காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியும் தீவிர காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக வலுப்பெற்றுள்ளதாகவும் தனியார் வானிலை ஆய்வாளர் ஹேமச்சந்தர் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: வங்கக்கடலில் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு மண்டலம்! சென்னை உள்பட வட மாவட்டங்களில் மழை எச்சரிக்கை!