மெத்தம்பெட்டமைன், பொதுவாக "மெத்" என்று அழைக்கப்படும் இந்த போதைப்பொருள், உலகம் முழுவதும் லட்சக்கணக்கான உயிர்களை அழித்து வரும் ஒரு சக்திவாய்ந்த மூளை செயல்பாட்டைத் தூண்டும் பொருளாகும். இது ஒரு செயற்கை ஊக்கமளிக்கும் மருந்து, அம்பெட்டமைனின் ஒரு வகையான தோற்றவடிவம். தனது தோற்றத்திலிருந்தே இது மனிதர்களின் வாழ்க்கையை முற்றிலும் மாற்றியமைக்கும் திறன் கொண்டது.
மெத்தம்பெட்டமைன் பயன்படுத்தப்படும் முறைகள் பலவகையானவை. இது வாய் வழியாக விழுங்கப்படலாம். மூக்கு வழியாக உறிஞ்சப்படலாம். புகைப்படுத்தப்படலாம் அல்லது ஊசி மூலம் செலுத்தப்படலாம். ஊசி மூலம் செலுத்தும்போது, தாக்கம் 5-10 நிமிடங்களுக்குள் தொடங்கி, 8-24 மணி நேரம் நீடிக்கும். புகைப்படுத்தும்போது, உற்சாக உணர்வு உடனடியாக ஏற்படும்.

இதேபோல் கஞ்சா, வலி நிவாரண மாத்திரைகள் போன்றவையும் பயன்படுத்தப்படுகின்றன. 2026 புத்தாண்டு நெருங்கி வருகிறது. இந்த நிலையில் போதைப்பொருட்களின் புழக்கம் அதிகம் இருக்கும் என்பதால் அதனை கட்டுப்படுத்த போலீசா தீவிர சோதனை நடத்தினர்.
இதையும் படிங்க: தண்ணி காட்டிய கஞ்சா வியாபாரி... சுட்டுப் பிடித்த போலீஸ்... அதிரடி நடவடிக்கை...!
புத்தாண்டு கொண்டாட்டத்திற்கு போதைப்பொருள் சப்ளை செய்வதை தடுக்கும் பணி தீவிரமடைந்துள்ளது. சென்னையில் கடந்த 20 நாட்களில் மட்டும் 130 பேர் போதை பொருள் சப்ளை விசாரணையின் போது கைது செய்யப்பட்டுள்ளனர். போதைப் பொருள் தொடர்பாக 61 வழக்குகள் பதிவு செய்து சென்னை போதைப்பொருள் தடுப்பு பிரிவினர் விசாரணை நடத்தி வருகின்றனர். கைது செய்யப்பட்ட 130 பேரிடம் இருந்து 131 கிராம் மெத்தபட்ட மைன், 219 கிலோ கஞ்சா 2701 வலி நிவாரண மாத்திரைகள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.
இதையும் படிங்க: யாருடன் கூட்டணி?... தவெக தலைவர் விஜய் தீவிர ஆலோசனை...!