இலங்கை அருகே வங்கக்கடலில் உருவாகியிருந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருக்கிறது. இலங்கைக்கு கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவில் தாழ்வு மண்டலம் மையம் கொண்டிருப்பதாக இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய தென்கிழக்கு இலங்கை பகுதிகளை ஒட்டியுள்ள இந்திய பெருங்கடல் பகுதிகளில் நிலை கொண்டிருந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியானது, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்திருக்கிறது. இது மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரையில் அம்மாந்தப்பேட்டைக்கு கிழக்கே சுமார் 170 கிலோமீட்டர் தொலைவிலும், மட்டக்களப்பிலிருந்து 210 கிலோமீட்டர் தொலைவிலும் தென்கிழக்கேமையம் கொண்டிருக்கிறது.
இது தென்மேற்கு வங்க கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை வழியாக கிட்டத்தட்ட வடக்கு-வடமேற்கு திசையை நோக்கி நகர்ந்து அடுத்த 12 மணி நேரத்திற்குள்ளாக ஆழ்ந்த காற்ற தாழ்வு மண்டலமாக தீவிரமடைய வாய்ப்பு இருப்பதாகவும், அதன் பிறகு அடுத்த 48 மணி நேரத்தில தென்மேற்கு வங்கக்கடல் மற்றும் அதனை ஒட்டிய இலங்கை கடற்கரை வழியாக வடக்கு-வடமேற்கு நோக்கி நகர்ந்து தமிழ்நாடு, புதுச்சேரி, சென்னை மற்றும் அதனை ஒட்டிய தெற்கு ஆந்திர கடற்கரை பகுதியை நோக்கி நகரும் என தகவல் என்பது வெளியிடப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: பகீர் அலர்ட்... வங்கக்கடலில் உருவானது காற்றழுத்த தாழ்வு பகுதி... இன்று எங்கெல்லாம் மழைக்கு வாய்ப்பு?
வங்கக்கடலில் தற்போது நிலை கொண்டிருந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக தீவிரமடைந்த நிலையில், அடுத்த 12 மணி நேரத்தில் அது புயலாக வலுவடையக் கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. புயலாக வலுப்பெறும் பட்சத்தில் ஏமன் நாடு பரிந்துரைத்துள்ள ‘டிட்வா’ என பெயர் சூட்டப்படும் என இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தமிழகத்தை பொறுத்த வரையில் அடுத்த சில தினங்களுக்கு பல்வேறு மாவட்டங்களுக்கு கனமழை மற்றும் மிக கனமழைக்கான ஆரஞ்சு மற்றும் ரெட் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
மலாக்கா ஜலசந்தி பகுதிகளில் நிலவிய காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெற்று, அதேபகுதிகளில் நிலவியது. அதன் பிறகு, மேற்கு திசையில் நகர்ந்து, இன்று “சென்யார்” புயலாக மேலும் வலுப்பெற்று, மலாக்கா ஜலசந்தி மற்றும் அதனை ஒட்டிய வடமேற்கு இந்தோனேசியா பகுதிகளில் நிலவியது. பிறகு, நேற்று இந்தோனேசியாவில் கடற்கரையைக் கடந்து வலுவிழந்தது. இந்நிலையில் வங்க கடலில் புதிதாக ஒரு புயல் "டிட்வா" உருவாக வாய்ப்புள்ளதாகவும் வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது.
இதையும் படிங்க: #BREAKING ராமநாதபுரத்தில் பள்ளிகளுக்கு விடுமுறை? - தலைமையாசிரியர்களுக்கு பறந்த உத்தரவு...!