ஜூலை 7 ஆம் தேதி முதல் தமிழ்நாடு முழுவதும் அதிமுக பொதுச் செயலாளர் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணத்தை நடத்தி வருகிறார். இந்த சுற்றுப்பயணம் மக்களைக் காப்போம், தமிழகத்தை மீட்போம் என்ற கருப்பொருளில் நடைபெறுகிறது. கோவை மாவட்டத்தில் உள்ள மேட்டுப்பாளையம் மற்றும் கவுண்டம்பாளையம் தொகுதிகளில் இருந்து இந்த சுற்றுப்பயணம் தொடங்கியது. ஜூலை 21 ஆம் தேதி தஞ்சாவூர் மாவட்டத்தில் முதல் கட்டம் முடிவடையும் என கூறப்பட்டுள்ளது. இதில் ஒரத்தநாடு, பட்டுக்கோட்டை, மற்றும் பேராவூரணி தொகுதிகள் அடங்குகின்றன.
தமிழ்நாட்டில் 234 சட்டமன்றத் தொகுதிகளையும் உள்ளடக்கி, மக்களைச் சந்தித்து, திமுக அரசின் தோல்விகளை அம்பலப்படுத்துவதும், அதிமுகவின் தேர்தல் வாக்குறுதிகளை மக்களுக்கு எடுத்துரைப்பதும் இதன் நோக்கம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாநில உரிமைகள், அமைதி, வளர்ச்சி, மற்றும் செழிப்பை மீட்டெடுப்பதாக எடப்பாடி பழனிச்சாமி உறுதியளித்துள்ளார். இந்த நிலையில், அவரது சுற்றுப்பயணம் அரசியலில் தாக்கத்தை ஏற்படுத்தலாம் எனக் கூறப்படுகிறது.

தற்போது பல்வேறு மாவட்டங்களுக்கு சென்று எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் செய்து வருகிறார். அதுமட்டுமில்லாமல் மக்களிடையே திமுக அரசு பற்றியும், அதிமுகவின் சாதனைகள் தொடர்பாகவும் விவரித்து வருகிறார். இந்த நிலையில், சட்டப்பேரவை தேர்தலை ஒட்டி வரும் 24ஆம் தேதி முதல் இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி தொடங்குகிறார்.
ஜூலை 24 முதல் ஆகஸ்ட் 8ஆம் தேதி வரை இரண்டாம் கட்ட சுற்றுப்பயணத்தை எடப்பாடி பழனிச்சாமி மேற்கொள்கிறார். புதுக்கோட்டை, சிவகங்கை, ராமநாதபுரம், தூத்துக்குடி, நெல்லை, தென்காசி, விருதுநகர் உள்ளிட்ட மாவட்டங்களில் சுற்றுப்பயணம் மேற்கொள்கிறார். மொத்தமாக 36 சட்டமன்ற தொகுதிகளில் அவர் பரப்புரை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதையும் படிங்க: குருவை போல சட்டையை கிழிக்கும் முட்டாள் கொத்தடிமைகள்! லெஃப்ட் ரைட் வாங்கிய அதிமுக...
இதையும் படிங்க: எடப்பாடிக்கு சாதகமான சுற்றுப்பயணம்.. உற்றுப்பார்த்த டெல்லி.. அமித்ஷாவே வராராமே?