ஈரோடு மாவட்டம் சிவகிரி அருகே விளாங்காட்டு வலசு கிராமத்தில் தனியாக வசித்து வந்த ராமசாமி- பாக்கியம் தம்பதியினர் படுகொலை செய்யப்பட்டனர். இந்த சம்பவத்திற்கு கண்டனம் தெரிவித்துள்ள அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி இது தொடர்பாக பதிவு ஒன்றை வெளியிட்டு உள்ளார். அதில், காவல்துறை மானியக் கோரிக்கையின் போது, சட்டம் ஒழுங்கு உள்ளதாக முதலமைச்சர் ஸ்டாலின் பெருமை பேசியதாகவும், இது தான் சட்டம் ஒழுங்கு சிறப்பாக இருக்கும் லட்சணமா என்றும் கேள்வி எழுப்பினார்.

திமுக ஆட்சிக்கு வந்தது முதல் அதே பகுதியில் நடைபெற்ற சில கொலை சம்பவங்களை பட்டியலிட்ட அவர், இது போன்ற தொடர் கொலை, கொள்ளை சம்பவங்களை "தனிப்பட்ட ஒன்று இரண்டு விஷயங்கள்" என்பதற்கு இந்த ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு வெட்கமாக இல்லையா எனவும் சாடினார். தமிழ்நாட்டு மக்கள் இரவில் நிம்மதியாக தூங்க முடியாமல் உயிரைக் கையில் பிடித்து வைத்திருக்கும் அச்ச நிலைக்கு தள்ளிய ஸ்டாலின் மாடல் திமுக அரசுக்கு கண்டனம் தெரிவித்துக் கொள்வதாக அவர் கூறினார்.
இதையும் படிங்க: பாஜக கூட்டணிக்கு பிறகு.. முதல்முறையாக கூடுகிறது அதிமுக செயற்குழு கூட்டம்... முக்கிய விவகாரங்கள் குறித்து விவாதம்!

இந்த கொலை, கொள்ளையில் தொடர்புள்ள குற்றவாளிகள் அனைவரின் மீதும் கடுமையான சட்ட நடவடிக்கை எடுப்பதுடன், இனியேனும் மாய உலகில் இருந்து வெளிவந்து, சட்டம் ஒழுங்கைக் காக்கும் தன் முதற்பணியை முறையாக செய்ய வேண்டும் என்றும் முதலமைச்சரை வலியுறுத்தி உள்ளார்.
இதையும் படிங்க: அடிதூள்; அதிமுக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் இந்த திட்டம் ரீஸ்டார்ட்; குட்நியூஸ் சொன்ன முன்னாள் அமைச்சர்!