அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தற்போதைய தவெக சிறுபான்மை ஆட்சியின் கீழ் தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு முற்றிலும் சீரழிந்துவிட்டதாக கடுமையாக விமர்சித்துள்ளார். முதல்வர் விஜய் தலைமையிலான இந்த ஆட்சியில், அவரது திரைப்படங்களில் வருவதுபோல கொலை வெறிக் காட்சிகள், வன்முறை வெறியாட்டங்கள் தற்போது தமிழகத்தின் வீதிகள்தோறும் நடந்தேறி வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
சாலைகளில் மழை வெள்ளம் ஓடுகிறதோ இல்லையோ இரத்த ஆறு ஓடிக்கொண்டிருக்கிறது என்றும் அவர் வேதனையுடன் குறிப்பிட்டுள்ளார்.தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் அண்மையில் நடந்த கொடூரமான சம்பவங்கள் இதற்கு சான்றாக அமைகின்றன. வேலூர் மாவட்டம் வடமறிலில் தொழிலதிபர் ஒருவர் கொல்லப்பட்டார். ஓமலூரில் பொதுமக்கள் முன்னிலையில் வாலிபர் வெட்டிக் கொல்லப்பட்டார் என தெரிவித்தார்.

சேலம் அருகே கிச்சிப்பாளையத்தில் நகைகளுக்காக தனியாக வசித்த முதாட்டி ஒருவர் வெட்டிக் கொல்லப்பட்டார். திருத்தணியில் திருட்டு பைக் விற்று வந்த பணத்தை பிரிப்பதில் தகராறு ஏற்பட்டு கொலை நடந்தது. திண்டுக்கல்லில் சிறையில் இருந்து ஜாமீனில் வந்தவர் வெட்டிக் கொல்லப்பட்டார். திருநெல்வேலியில் நீதிமன்றத்தில் சாட்சி சொல்லிவிட்டு வெளியே வந்தவர் கட்சிப் பகலில் படுகொலை செய்யப்பட்டார். ஈரோட்டில் மாணவர்கள் மீது கொலைவெறித் தாக்குதல் நடந்தது. சென்னையில் தன்னுடைய மகள் மீது நடப்பெற்ற பாலியல் துன்புறுத்தல் முயற்சி குறித்து காவல் நிலையத்தில் புகார் அளித்த தந்தை படுகொலை செய்யப்பட்டதாகவும் குறிப்பிட்டுள்ளார். தமிழகத்தில் ரத்த ஆறு ஓடுவதாக குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: ரசிகர் மன்றத்தில் இருந்து வந்த எங்களை புறக்கணிப்பதா? – த.வெ.க. தலைமைக்கு எதிராக அதிருப்தி குரல்!
மக்களை தொடர்ந்து எப்படி ஏமாற்றலாம், மைனாரிட்டி ஆட்சியை எப்படி தக்க வைக்கலாம் என்பதிலேயே கவனம் செலுத்தும் முதலமைச்சர் விஜய், அவருடைய கையில்தான் தமிழகக் காவல்துறை இருக்கிறது என்பதை மறந்துவிடக்கூடாது என்றும் தமிழகத்தில் பணியாற்றும் காவலர்கள் தன் பாதுகாப்புக்காக மட்டுமே இருக்கிறார்கள் என்ற எண்ணத்தை முதலமைச்சர் விஜய் கைவிட்டுவிட்டு, கொலை பாதகர்களின் கொம்படியில் இருந்து அப்பாவி மக்களைக் காக்கவும், தமிழகத்தில் சட்டம் ஒழுங்கை சீர்படுத்தும் நடவடிக்கையில் தமிழகக் காவல் துறையை முனைப்புடன் ஈடுபடுத்தவும் வேண்டும் என்று வலியுறுத்துகிறேன் என எடப்பாடி பழனிசாமி தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: "பாசிசம்... பாயாசம்-ன்னு ரைய்மிங்"..! செவிலியர்களை அடக்குவது அக்கிரமம்... EPS எதிர்ப்பு..!!