2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். மக்களைக் காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். பல்வேறு பகுதிகளுக்கு சென்று பொது மக்களை சந்தித்து பிரச்சாரம் மேற்கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி, பலதரப்பு மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி வருகிறார்.
மேலும் தேர்தலுக்கான வாக்குறுதிகளையும் கொடுத்து வருகிறார். இந்த நிலையில் எடப்பாடி பழனிச்சாமியின் பிரச்சாரத்தின் போது ஆளில்லாத ஆம்புலன்ஸ் வந்ததால் ஆத்திரமடைந்த இபிஎஸ், மிரட்டல் விடுக்கும் தொனியில் பேசியது சர்ச்சையை கிளப்பி உள்ளது.
இனி கூட்டத்திற்குள் ஆம்புலன்ஸ் வந்தால், அதை ஓட்டிட்டு வர்ற ட்ரைவரே அதில் பேஷண்டாகப் போகிற நிலைமை வரும் என்று பழனிச்சாமி பேசி உள்ளார். அது மட்டும் இல்லாமல் அந்த வாகனத்தின் நம்பரை குறித்து வைத்துக் கொள்ளுங்கள் என்றும் எப்போது தனது பிரச்சாரம் நடந்தாலும் அங்கு ஆம்புலன்ஸ் வருவதாகவும் கூறியிருந்தார். ஆளுங்கட்சியை கடுமையாக சாடி பேசிய எடப்பாடி பழனிச்சாமி ஆம்புலன்ஸ் ஓட்டுனருக்கு மிரட்டல் விடுத்த சம்பவம் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: என்ன பேச்சு இதெல்லாம்? ஆம்புலன்ஸ் டிரைவரை மிரட்டிய இபிஎஸ்.. கொதித்துப் போன மா.சு..!

ஆம்புலன்ஸ் ஓட்டுநரை மிரட்டிய எடப்பாடி பழனிச்சாமி பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் என தமிழ்நாடு தனியார் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் வலியுறுத்தி உள்ளது. அழைத்தவுடன் ஓடிச் சென்று காப்பாற்றும் ஆம்புலன்ஸ் ஓட்டுநர்களை பாராட்டவில்லை என்றாலும் அவமதித்தது ஏற்க முடியாது என தெரிவிக்கப்பட்டுள்ளது. இபிஎஸ் மன்னிப்பு கேட்கா விடில் மாநிலம் தழுவிய போராட்டம் நடத்தப்படும் என ஆம்புலன்ஸ் ஓட்டுநர்கள் சங்கம் அறிவித்துள்ளது.
பெண் நோயாளியை அடுக்கம்பாறை மருத்துவமனைக்கு அழைத்துச் செல்ல சென்ற ஓட்டுநரை இபிஎஸ் மிரட்டி உள்ளதாகவும் சங்கத்தின் சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. வேலூர் மாவட்டம் அணைக்கட்டு பகுதியில் இபிஎஸ் பிரச்சாரத்தின் போது நோயாளி இல்லாமல் சைரனுடன் ஆம்புலன்ஸ் வந்ததால் எடப்பாடி பழனிச்சாமி மிரட்டி இருந்ததாக கூறியுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: ADMK பொதுச் செயலாளர் விவகாரம்... இபிஎஸ் மனு தள்ளுபடி செய்த உத்தரவுக்கு இடைக்கால தடை!