2026 சட்டமன்றத் தேர்தலை அடிப்படையாகக் கொண்டு மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி சுற்றுப்பயணம் நடத்தி வருகிறார். அவ்வப்போது, விவசாயிகள், மீனவ பிரதிநிதிகள், நெசவாளர்கள் உட்பட பல்வேறு தரப்பினரிடம் கலந்துரையாடி அவர்களின் குறைகளை கேட்டு அறிந்து வருகிறார். அது மட்டுமல்லாது அதிமுகவின் சாதனைகள் மற்றும் திமுக ஆட்சியில் நடக்கும் அவலங்கள் தொடர்பாகவும் எடுத்துரைத்து வருகிறார்.
இந்த நிலையில், திமுகவின் உருட்டுகளும் திருட்டுகளும் என்ற அதிமுகவின் புதிய பிரச்சாரத் திட்டத்தை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி புதுக்கோட்டையில் தொடங்கி வைத்தார். மேலும் உண்மைக்காக உரிமைக்காக என்ற புதிய பிரச்சாரத் திட்டத்தையும் அவர் தொடங்கி வைத்துள்ளார். திமுக ஆட்சியில் பெண்களுக்கு நடந்த அநீதிகள் குறித்த தொகுப்புகள் அடங்கிய காணொளி வெளியிடப்பட்டது. பதில் சொல்லுங்க அப்பா என்ற தலைப்பில் பெண்களின் பாதிப்புகள் குறித்த காணொளியையும் வெளியிட்டார். மேலும், தமிழ்நாடு முழுவதும் வீடு வீடாகச் சென்று மக்களிடம் கொடுக்கப்பட உள்ள ரிப்போர்ட் கார்டை இபிஎஸ் வெளியிட்டார்.

பின்னர் அவர் செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது, திமுக ஆட்சியில் நேர்மையான அதிகாரிகளுக்கு மரியாதை கிடையாது என்றும் நேர்மையான காவல்துறை அதிகாரிகளை பழிவாங்குவது நல்ல அரசுக்கு அழகல்ல என்றார். 2026 இல் அதிமுக தலைமையிலான கூட்டணி அமோக வெற்றி பெறும் என இபிஎஸ் தெரிவித்தார்.
இதையும் படிங்க: அதிமுகவை அக்கு, அக்கா பிரிச்சி போட்டுடுவாங்க... எடப்பாடி பழனிசாமியை எச்சரித்த திருமா...!
அதிமுக கூட்டணிக்கு பெரிய கட்சிகள் எப்போது வர வேண்டுமோ அப்போது வரும் என்று கூறிய எடப்பாடி பழனிச்சாமி, கூட்டணிக்கு எதிராக பேட்டி கொடுப்பவர்கள் தான் கூட்டணியை உடைக்க முயல்வதாகவும் கூறினார். அமித்ஷா வீட்டு கதவை தட்டவில்லை என்ற துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் விமர்சனத்திற்கு அப்போது பதில் அளித்தார். திமுகவினர் சென்று பிரதமர் வீட்டு கதவை தட்டினால் மட்டும் சரியா என கேள்வி எழுப்பினார்.
இதையும் படிங்க: எழுதி கொடுத்து படிக்க ஸ்டாலினா? மனசுல பட்டத பேசுற இபிஎஸ்! வலுக்கும் விமர்சனங்கள்