தமிழக சட்டசபை தேர்தலை கருத்தி கொண்டு அதிமுக தற்போதே தேர்தல் பிரசார பணிகளை தொடங்கியுள்ளது. அதன் ஒரு பகுதியாக தமிழகம் முழுவதும் மக்கள் சந்திப்பு சுற்றுபயணம் ஒன்றை மேற்கொண்டு வருகிறார். கொங்கு மண்டலமான கோவையிலிருந்து தனது ‘மக்களைக் காப்போம்... தமிழகத்தை மீட்போம்’ சுற்றுப்பயணத்தை தொடங்கியுள்ளார்.
எடப்பாடி பழனிசாமியின் இந்தச் சுற்றுப்பயணம் முதலில் அதிமுகவினருக்கு உற்சாகத்தை கொடுத்துள்ளது. எனவே அவர் செல்லும் இடமெல்லாம் அதிமுக நிர்வாகிகளும், தொண்டர்களும் திரளாக காத்திருந்து சிறப்பான வரவேற்பளித்து வருகின்றனர். அதனை முறையான மரியாதையுடன் ஏற்று வந்த எடப்பாடி பழனிசாமி, நேற்று அதிமுக நிர்வாகி ஒருவரிடம் நடந்து கொண்ட விதம் கட்சிக்குள் சலசலப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
பேராவூரணியில் எடப்பாடி பழனிசாமியை வரவேற்க அவரது புகைப்படம் உள்ள டி ஷர்ட்டை அணிந்து அதிமுக கொடியை கையில் ஏந்தி முழக்கங்கள் எழுப்பியப்படி பள்ளி மாணவர்கள் பங்கேற்றது பரபரப்பை ஏற்படுத்தியது. அதேபோல் கூட்டத்தில் பாஜக நிர்வாகிகள் பாஜக கொடிகளை தூக்கிப்பிடித்திருந்த நிலையில் அதனை இறக்கும் படி அதிமுக நிர்வாகிகள் வாய்த்தகராறில் ஈடுபட்டனர். எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க எம்.ஜி.ஆர் வேடம் அணிந்து வந்த சிறுவன் அண்ணா சிலையின் மேல் ஏறி நின்று வரவேற்பு அளித்தது அனைவரது கவனத்தையும் ஈர்த்தது. இப்படி சிறப்பான வரவேற்புக்கு இடையே அதிமுக நிர்வாகி ஒருவரை எடப்பாடி பழனிசாமி அவமதித்தது கட்சியினரை அதிருப்தியில் ஆழ்த்தியுள்ளது.
இதையும் படிங்க: எப்ப பாத்தாலும் ஸ்டாலின் பேசுறான்..! முதல்வரை ஒருமையில் பேசிய இபிஎஸ்-க்கு சேகர்பாபு கடும் கண்டனம்..!
இதையும் படிங்க: அதிமுக அமைச்சரவையில் அமமுகவிற்கு பங்கு... எடப்பாடி பழனிசாமியை சீண்டி பார்க்கும் டி.டி.வி...!
அதிமுக நிர்வாகி ஒருவர் எடப்பாடி பழனிச்சாமி வரவேற்க தேங்காய் இளநீரால் கட்டப்பட்ட ராட்சத மாலையை கிரேனில் வைத்து கட்டி கூட்டத்திற்கு நடுவே கொண்டு வந்து நிறுத்திய நிலையில், எடப்பாடி பழனிச்சாமி வருகை தர சிறிது நேரம் இருந்தபோது உடனடியாக அந்த கிரேனை அப்புறப்படுத்த அதிமுக தலைமையிடம் இருந்து உத்தரவு வந்துள்ளது.
ஆனால் தலைமை அறிவிப்பை மீறி கிரேனை அப்புறப்படுத்தாமல் அங்கேயே நிறுத்தி வைத்து, எடப்பாடி பழனிச்சாமி பேசி முடித்துவிட்டு வருகை தரும்போது கிரேன் மூலமாக ராட்சத மாலையை அணிவிக்க அந்த அதிமுக நிர்வாகி முயன்றார். இதனால் அப்செட்டான எடப்பாடி பழனிச்சாமி ராட்சத மாலை தன்னை ரீச் ஆவதற்கு முன்னதாகவே தனது பேருந்துக்குள் சென்று அமர்ந்து விட்டார். இதனால் பேருந்து கண்ணாடிக்கு முன்பு அந்த மாலையை காண்பித்து விட்டு பின்னர் அந்த மாலையை அதே கிரேன் மூலமாக அதிமுக நிர்வாகி எடுத்துச் சென்றார். இச்சம்பவம் அப்பகுதியில் சர்ச்சையை ஏற்படுத்தியது.
இதையும் படிங்க: நிலைத்தடுமாறும் இபிஎஸ்! அவரே சசிகலா தயவால் முதல்வரானவர் தான்.. திமுக கடும் விமர்சனம்..!
இதையும் படிங்க: அதிமுக அமைச்சரவையில் அமமுகவிற்கு பங்கு... எடப்பாடி பழனிசாமியை சீண்டி பார்க்கும் டி.டி.வி...!