அதிமுக பொதுச்செயலாளரும் எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிச்சாமி மக்களை காப்போம் தமிழகத்தை மீட்போம் என்ற பெயரில் தமிழக முழுவதும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். அப்போது, முதலமைச்சர் ஸ்டாலினை எப்ப பார்த்தாலும் ஸ்டாலின் பேசுறான் என்று இபிஎஸ் ஒருமையில் பேசி இருந்தார். இதற்கு திமுக தரப்பில் கடும் கண்டனம் தெரிவிக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு என்ற செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, எடப்பாடி பழனிச்சாமி பேசுவது அவரது தரத்தை காட்டுவதாகவும் அடிமை இயக்கத்தை யார் நடத்துகிறார்கள் என்பது அவர்களுக்கே புரியும் என்றும் கூறினார்.
தினம்தோறும் பிரச்சார பயணத்தில் ஒவ்வொரு விதமான கருத்துக்களை கூறுவதாகவும், தனித்தே ஆட்சியைப் பிடிப்போம் என்றும் அடுத்த நாள் யாருமில்லாமல் தனித்து நின்ற ஆட்சி பிடிப்பேன் என்று அர்த்தத்தில் சொல்லவில்லை என்றும் மற்றொரு நாள் பாஜகவில் அமித் ஷா எடுப்பதுதான் முடிவு என்று மற்றொரு கருத்தும் கூறி வருகிறார் என்று தெரிவித்தார்.

நாளொரு மேனியும் பொழுது ஒரு வண்ணமுமாக குயிலே பிறந்து பொய்யிலே வளர்ந்த புலவர் பெருமானாக இன்றைக்கு பல்டி சாமி தினம்தோறும் ஒவ்வொரு கருத்துக்களை கூறி வருகிறார் என சேகர்பாபு விமர்சித்தார். தீர்வில்லா பயணத்தை நோக்கி சென்று கொண்டிருப்பவர் எடப்பாடி பழனிச்சாமி என்று விமர்சித்த அவர், முதலமைச்சர் ஸ்டாலின் சந்தித்த தேர்தல்களில் எல்லாம் தோல்வியை மட்டுமே எடப்பாடி பழனிச்சாமிக்கு பரிசாக தந்து கொண்டிருக்கிறார் எனவும் அண்ணாமலைக்கு தான் திமுக தோல்வியை பரிசாக தந்து கொண்டிருக்கிறது என்றும் கூறினார்.
இதையும் படிங்க: திமுக கதை க்ளோஸ்! 2026ல் மக்கள் வீட்டுக்கு அனுப்ப போறாங்க.. எடப்பாடி பழனிச்சாமி உறுதி..!
தமிழ் ஆங்கிலத்தை வளர்த்தது, ஆன்மீகம் தமிழை வளர்த்தது என்பதில் மாற்று கருத்து இல்லை என கூறிய அவர், மக்களோடு இருக்கும் முதல்வர் தினம்தோறும் ஒரு திட்டங்களை ஆட்சி பொறுப்பு ஏற்ற முதல் கொண்டு வந்து கொண்டிருப்பதாகவும், ஒட்டு மொத்த திட்டங்களையும் மக்களிடம் கொண்டு செல்ல முடியாது., மக்களுடைய தேவைகளை அறிந்து தான் ஒவ்வொரு காலகட்டத்தில் ஒவ்வொரு திட்டங்களை கொண்டு செல்ல முடியும் என்றும் கூறினார்.
மக்களுடைய தேவைகளை அறிந்ததால் தான் இன்றைக்கு தினம் தோறும் பத்தாயிரத்திற்கும் மேற்பட்ட 13 துறைகளைச் சார்ந்த 43 சேவைகளை கொண்ட உங்களுடன் ஸ்டாலின் என்ற பயணத்தை மேற்கொண்டு இருப்பதாக தெரிவித்தார். மக்கள் குறைகளுக்கு தீர்வைக் கொண்டு வருபவர் முதல்வர் ஸ்டாலின் என்றும் தீர்வில்லாத பயணத்தை நோக்கி செல்பவர் எடப்பாடி பழனிச்சாமி எனவும் அவர் கூறினார்.
இதையும் படிங்க: புயல் நேரத்துலையும் புயல் வேகத்துல அதிமுக செயல்பட்டுச்சு! இபிஎஸ் ஃபயர் ஸ்பீச்..!