தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்கி வரும் நிலையில், உளவுத்துறை ஐஜி மாற்றம் குறித்து அரசியல் மற்றும் நிர்வாக வட்டாரங்களில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசின் உளவுத்துறை ஐஜியாக பல ஆண்டுகளாக பணியாற்றி வரும் செந்தில்வேலன் ஐபிஎஸ் அதிகாரியை மாற்ற வேண்டும் என்று பாஜக சார்பில் தலைமை தேர்தல் அதிகாரியிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
இந்த மாற்றக் கோரிக்கை தேர்தல் நடைமுறையின் நடுநிலைத்தன்மையை உறுதி செய்யும் நோக்கில் எழுந்துள்ளது என்றாலும், அரசியல் கட்சிகளிடையே விவாதங்களைத் தூண்டியுள்ளது. தமிழகத்தில் வரும் சட்டமன்றத் தேர்தல் ஏப்ரல் 23, 2026 அன்று நடைபெற உள்ள நிலையில், இந்திய தேர்தல் ஆணையம் (ECI) ஏற்கனவே பல முக்கிய நிர்வாக அதிகாரிகளை மாற்றியுள்ளது.

முதலில் தலைமைச் செயலாளர் என். முருகானந்தம், டிஜிபி ஜி. வெங்கட்ராமன் உள்ளிட்டோர் மாற்றப்பட்டனர். பின்னர் உள்துறை செயலாளர் தீரஜ் குமார் ஐஏஎஸ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக கே. மணிவாசன் ஐஏஎஸ் நியமிக்கப்பட்டார். இந்த அதிரடி மாற்றங்கள் அனைத்தும் தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி நடைபெற்றுள்ளன.
இதையும் படிங்க: உயிர் உள்ளவரை இயக்கத்திற்காக பாடுபடுவேன்..! பரப்புரையில் செங்கோட்டையன் சூளுரை..!
இந்தச் சூழலில் உளவுத்துறை ஐஜி செந்தில்வேலனும் மாற்றப்பட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. இந்த நிலையில் உளவுத்துறை ஐஜி மாற்றம் செய்யப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐஜியாக இருந்த செந்தில்வேலன் மாற்றம் செய்யப்பட்டார். அவருக்கு பதிலாக புதிய உளவுத்துறை ஐஜியாக அவிநாசி குமார் நியமனம் செய்யப்பட்டிருக்கிறார். இந்திய தேர்தல் ஆணையம் இந்த அதிரடி உத்தரவை பிறப்பித்துள்ளது.
இதையும் படிங்க: பாஜகவை எதிர்க்கும் துணிச்சல் மிக்க ஒரே தலைவர் ஸ்டாலின்தான்..! அமைச்சர் ரகுபதி பரப்புரை.!!