செய்வினை" அல்லது "பில்லி சூனியம்" போன்ற மாந்திரீக செயல்பாடுகள் பற்றிய நம்பிக்கைகள் பரவலாக உள்ளன. மண்டை ஓடுகள், எலும்புகள், அல்லது மயானத்தில் சேகரிக்கப்பட்ட பொருட்கள் இத்தகைய செயல்களுக்கு பயன்படுத்தப்படுவதாக மக்கள் நம்புகின்றனர்.
இந்த பொருட்கள் மூலம் தீய சக்திகளை அழைப்பது, சாபம் விடுவது, அல்லது மற்றவர்களுக்கு தீங்கு விளைவிப்பது சாத்தியம் என்று பரவலாக நம்பப்படுகிறது. அதுமட்டுமல்லாது சில கடவுளின் சிலைகளும் பயன்படுத்துவதாகவும் கூறப்படுகிறது. இதனால், இவற்றை கையாளும் நபர்கள் மீது சந்தேகமும் பயமும் உருவாகிறது.

சென்னை எண்ணூர் நெட்டுக்குப்பம் பகுதியில் காளி சிலையை வீட்டில் வைத்து வழிபாடு செய்ய மீனவர்கள் எதிர்ப்பு தெரிவித்து சாலை மறியலில் ஈடுபட்டனர். நெட்டுக்குப்பம் பகுதியை சேர்ந்த கார்த்திக் என்பவர் தனது வீட்டில் காளி சிலையை வைத்து மாந்திரீகத்தில் ஈடுபடுவதாகவும், இதனால் அப்பகுதியில் பல மரணங்கள் ஏற்படுவதாக மீனவ மக்கள் புகார் அளித்தனர்.
இதையும் படிங்க: ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசு..! மதுரையில் ஆர்ப்பாட்டம் நடக்க போகுது... அதிமுக முக்கிய அறிவிப்பு...!
இதை அடுத்து கடந்த ஜூன் மாதத்தில் l மக்கள் போராட்டத்தை கருத்தில் கொண்டு காளி சிலையை வருவாய்த்துறையினர் அலுவலகத்திற்கு எடுத்துச் சென்று பாதுகாப்பாக வைத்தனர். இதனால், கார்த்திக் உயர் நீதிமன்றத்தில் முறையீடு செய்துள்ளார். இந்த வழக்கை விசாரித்த நீதிமன்றம் சிலையை மீண்டும் அவரிடமே வழங்க உத்தரவிட்டது. இன்று மாலைக்குள் சிலையை கார்த்திக் வீட்டில் ஒப்படைக்க உத்தரவிடப்பட்டுள்ள நிலையில், இதற்கு எதிர்ப்பு தெரிவித்துநெட்டுக்குப்பம் மீனவ மக்கள் ஊருக்குள் வரும் சாலையை மறித்து போராட்டம் நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: மெரினாவில் பரபரப்பு..!! போராட்டத்தில் குதித்த தூய்மை பணியாளர்கள்..!! குண்டுக்கட்டாக கைது..!!