கடந்த 55 மாதங்களாக, மதுரை மாநகரில் மாண்புமிகு அம்மா அரசின் பொற்கால ஆட்சியில் கொண்டுவரப்பட்ட திட்டங்களுக்கு ஸ்டிக்கர் ஒட்டி திறந்ததைத் தவிர எந்தவிதமான புதிய திட்டங்களும் கொண்டுவரப்படவில்லை என்றும். மதுரை மாநகரின் போக்குவரத்து நெரிசலைக் குறைக்க மதுரை மெட்ரோ ரயில் திட்டத்திற்கான முன்மொழிவைக்கூட இந்த விடியா திமுக அரசு முழுமையாக வழங்கவில்லை எனவும் அதிமுக தெரிவித்துள்ளது.
மேலும், திமுக-வைச் சேர்ந்த மதுரை மாநகராட்சி மேயர், நிலைக் குழுத் தலைவர்கள், மண்டலக் குழுத் தலைவர்கள், திமுக மாமன்ற உறுப்பினர்கள் இணைந்து, முறைகேடான வரி விதிப்பின் மூலம் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் செய்துள்ளதாக, திமுக அரசின் அதிகாரிகளே கண்டறிந்து அறிக்கையை அரசுக்கு சமர்ப்பித்த நிலையில், ஊழலில் திளைத்த மற்றவர்கள் மீது, இதுவரை இந்த விடியா திமுக அரசு சட்டப்படியான நடவடிக்கை எதுவும் எடுக்கப்படவில்லை என்று குற்றம்சாட்டி உள்ளது.

எனவே, மதுரை மாநகராட்சியின் நிர்வாக சீர்கேடுகளைக் கண்டித்தும் முறைகேடான வரி விதிப்பில் சுமார் 200 கோடி ரூபாய் ஊழல் நடைபெற்றிருப்பது குறித்து முறையான விசாரணை நடைபெறாததைக் கண்டித்தும், குண்டும் குழியுமாக உள்ள சாலைகளை புதுப்பிக்காத, மக்களுக்கு முறையாக குடிநீர் வழங்காத மாநகரட்சி நிர்வாகத்தையும், இதுகுறித்து உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளாத விடியா திமுக அரசையும் கண்டித்தும் ஆர்ப்பாட்டம் நடத்த உள்ளதாக அதிமுக அறிவித்துள்ளது.
இதையும் படிங்க: மதுரை: புதிய மேம்பாலத்திற்கு வீரமங்கை வேலுநாச்சியார் பெயர்..!! முதல்வர் ஸ்டாலின் அறிவிப்பு..!!
அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழக மதுரை மாநகர், மதுரை புறநகர் கிழக்கு மாவட்டக் கழகங்களின் சார்பில் வரும் 17 ஆம் தேதி (17.12.2025) புதன் கிழமை காலை 10 மணியளவில், பழங்காநத்தம் ஜெயம் தியேட்டர் அருகில் மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
முன்னாள் அமைச்சர் செல்லூர் ராஜூ, தலைமையில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. நிர்வாகத் திறனற்ற விடியா திமுக ஃபெயிலியர் மாடல் ஸ்டாலின் அரசைக் கண்டித்து நடைபெற உள்ள இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் அனைவரும் பெருந்திரளான அளவில் கலந்துகொள்ளுமாறு கேட்டுக் கொள்ளப்பட்டு உள்ளது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டை வஞ்சிக்கும் பாஜக... விளைவு பயங்கரமா இருக்கும்... திருமா. வார்னிங்...!