பொதுச் செயலாளர் விவகாரத்தில் தொடரப்பட்ட வழக்கை ரத்து செய்யக்கோரி எடப்பாடி பழனிச்சாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது. முன்னதாக சென்னை உரிமையியல் நீதிமன்றம், எடப்பாடி க. பழனிசாமி அ.தி.மு.க. பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதை எதிர்த்து திண்டுக்கல் சூரியமூர்த்தி என்பவரால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை தள்ளுபடி செய்ய கோரி எடப்பாடி பழனிசாமி தாக்கல் செய்த மனுவை நிராகரித்து உத்தரவிட்டது.
இந்த வழக்கில், சூரியமூர்த்தி தரப்பில், கட்சி விதிகளின்படி பொதுச்செயலாளர் அடிப்படை உறுப்பினர்களால் மட்டுமே தேர்ந்தெடுக்கப்பட வேண்டும் என வாதிடப்பட்டது. ஆனால், எடப்பாடி தரப்பில், சூரியமூர்த்தி கட்சி உறுப்பினரே இல்லை எனவும், அவருக்கு கட்சி நடவடிக்கைகள் குறித்து கேள்வி எழுப்ப உரிமை இல்லை எனவும் தெரிவிக்கப்பட்டது.

நீதிபதி சிவசக்திவேல் கண்ணன், கட்சி விதிகளை மீறி பொதுச்செயலாளர் தேர்ந்தெடுக்கப்பட்டதாக சூரியமூர்த்தி தரப்பு வாதத்தை ஏற்கவில்லை, ஆனால் எடப்பாடி தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்து, வழக்கு விசாரணைக்கு தகுதியானது என உத்தரவிட்டார். உரிமையியல் நீதிமன்றம் தள்ளுபடி செய்த வழக்கில், சென்னை உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்தது.
இதையும் படிங்க: Be Cool செங்கோட்டையன்... பாத்துக்கலாம்! சமாதானம் செய்யும் முயற்சியில் பாஜக
அதிமுக பொதுச்செயலாளராக தேர்வு செய்ததை எதிர்த்து தொடர்ந்த வழக்கை நிராகரிக்க கூறிய மனு தள்ளுபடி செய்யப்பட்டு இருந்த நிலையில் இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. மேலும் வழக்கின் விசாரணைக்கும் இடைக்கால தடை விதிக்கப்பட்டது. இது தொடர்பாக சூரியமூர்த்தி பதிலளிக்கவும் நீதிபதிகள் தெரிவித்தனர். இந்த நிலையில், எடப்பாடி பழனிச்சாமிக்கு எதிரான வழக்கு ரத்து செய்ய மறுத்த உரிமையியல் நீதிமன்றத்தின் உத்தரவு ரத்து செய்யப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: மனு கொடுக்கும் முகாமா? மக்களை முடக்கும் முயற்சியா? திமுக அரசை சாடிய அதிமுக