• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Wednesday, April 08, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 தமிழ்நாடு

    அதிமுக ஆட்சி அமையட்டும்.. 3 மாசத்துல கஞ்சா முற்றிலும் ஒழிக்கப்படும்..!! மக்களுக்கு இபிஎஸ் ப்ராமிஸ்..!!

    அதிமுக ஆட்சி அமைந்தவுடன் 3 மாதங்களில் கஞ்சா ஒழிக்கப்படும் என்று எடப்பாடி பழனிசாமி உறுதியளித்துள்ளார்.
    Author By Shanthi M. Wed, 08 Apr 2026 13:51:39 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    eps-election-campaign-at-saidapet

    தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் சூழலில், அரசியல் கட்சிகள் தீவிர வாக்கு சேகரிப்பில் களமிறங்கியுள்ளனர். இதனால் தமிழகமே பரபரப்பாக காணப்படுகிறது. இந்நிலையில் சென்னை சைதாப்பேட்டை சட்டமன்றத் தொகுதியில் அம்மா மக்கள் முன்னேற்றக் கழக (அமமுக) வேட்பாளரை ஆதரித்து அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தீவிர பிரச்சாரம் மேற்கொண்டார்.

    பிரச்சாரக் கூட்டத்தில் உரையாற்றிய அவர், திமுக ஆட்சியின் மீது கடுமையான விமர்சனங்களை முன்வைத்தார். “திமுக ஆட்சியில் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. மக்களின் அன்றாட வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது” என்று குற்றம் சாட்டினார். மேலும், “திமுக அரசு குற்றவாளிகளுக்கு ஆதரவாகச் செயல்படுகிறது. சட்டம் ஒழுங்கு முழுமையாக சீர்குலைந்துள்ளது. இந்த ஆட்சி தொடர வேண்டுமா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார்.

    Edappadi Palaniswami

    அதிமுக ஆட்சிக்கு வந்தால் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்று உறுதியளித்த எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் ‘யார் அந்த சார்?’ என்று கண்டுபிடித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும். திமுக ஆட்சியில் தரமான மழைநீர் வடிகால் அமைப்புகள் உருவாக்கப்படவில்லை. அதனால்தான் சென்னை மக்கள் ஒவ்வொரு மழைக்காலத்திலும் கடுமையான பாதிப்புக்கு உள்ளாகின்றனர்” என்றார்.

    இதையும் படிங்க: சீர்காழி தேர்தல் பரப்புரை: நான் உங்கள் வீட்டு மாப்பிள்ளை! முதல்வர் மு.க. ஸ்டாலின் உணர்ச்சிமிக்க பேச்சு!

    ஊழல் குறித்தும் திமுகவை கடுமையாக விமர்சித்த அவர், “ஊழல் செய்வதுதான் திமுகவின் முதன்மை வேலையாக இருக்கிறது. திமுக தேர்தல் அறிக்கையில் அளித்த வாக்குறுதிகளில் வெறும் நான்கில் ஒரு பங்கு மட்டுமே நிறைவேற்றப்பட்டுள்ளது. மீதமுள்ள வாக்குறுதிகள் அனைத்தும் காற்றில் பறக்கவிடப்பட்டுள்ளன” என்று தெரிவித்தார். கல்விக் கடன் ரத்து, கியாஸ் சிலிண்டருக்கு மானியம், ரேஷன் கடைகளில் ஒரு கிலோ சர்க்கரை கூடுதலாக வழங்குவது உள்ளிட்ட வாக்குறுதிகள் நிறைவேற்றப்படவில்லை என்று சுட்டிக்காட்டினார்.

    தமிழகத்தில் கஞ்சா புழக்கம் அதிகரித்துள்ளதாகவும், கஞ்சா விற்பனையாளர்களுக்கு திமுக அரசே துணை போவதாகவும் குற்றம் சாட்டிய எடப்பாடி பழனிசாமி, “அதிமுக ஆட்சி அமைந்தவுடன் மூன்று மாதங்களுக்குள் கஞ்சா முழுமையாக ஒழிக்கப்படும்” என்று உறுதியளித்தார். மின்கட்டணம் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது, வீட்டு வரி அதிகரிக்கப்பட்டுள்ளது, குப்பைக்கும் வரி விதிக்கப்பட்டுள்ளது உள்ளிட்ட பல்வேறு பிரச்சினைகளை எடுத்துக்காட்டிய அவர், “நாட்டில் குப்பைக்கும் வரி விதித்த ஒரே அரசு திமுக ஆட்சிதான்” என்று விமர்சித்தார்.

    Edappadi Palaniswami

    திமுக ஆட்சியை “கருணாநிதி குடும்பத்தின் வளமைக்காக நடைபெறும் குடும்ப ஆட்சி” என்றும், “வாரிசு அரசியல்” என்றும் விமர்சித்த எடப்பாடி பழனிசாமி, “இந்த வாரிசு அரசியல் தமிழகத்துக்கு தேவையா?” என்று மக்களிடம் கேள்வி எழுப்பினார். திமுகவின் கூட்டணிக் கட்சிகளின் நிலையைச் சுட்டிக்காட்டிய அவர், “திமுக கூட்டணி கட்சிகளைப் பார்க்கும்போது பரிதாபமாக உள்ளது.

    வரவிருக்கும் சட்டமன்றத் தேர்தலில் இந்த ஆட்சிக்கு முற்றுப்புள்ளி வைக்க வேண்டும்” என்று வலியுறுத்தினார். எடப்பாடி பழனிசாமியின் இந்த பிரச்சாரம் சைதாப்பேட்டை தொகுதியில் அதிமுக - அமமுக கூட்டணிக்கு வலுசேர்க்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
     

    இதையும் படிங்க: அடிமை அதிமுக-வின் முதுகில் ஏறி வரும் பாஜக-வைத் தடுப்போம்! நெல்லையில் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் ஸ்டாலின்பிரச்சாரம்!

    மேலும் படிங்க
    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார்

    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தமிழ்நாடு
    விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! தமிழக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிக்கை!

    விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! தமிழக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது! தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது! தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!

    சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!

    தமிழ்நாடு
    கொளத்தூரில்

    கொளத்தூரில் 'டூப்' விஜய்! தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வினோத பிரசாரத்தால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    GPay-வில் புதுசா வந்திருக்கு

    GPay-வில் புதுசா வந்திருக்கு 'POCKET MONEY'..!! என்னது.. இத தொட்டா பணம் போய்டுமா..!! தெளிவான விளக்கம் இதோ..!!

    மொபைல் போன்

    செய்திகள்

    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தேமுதிகவில் இருந்து விலகி அதிமுகவில் இணைந்தார் 'மீசை' ராஜேந்திரன்!

    தமிழ்நாடு
    விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! தமிழக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிக்கை!

    விஜய் மன்னிப்பு கேட்க வேண்டும்! தமிழக காங்கிரஸ் கட்சி அதிரடி அறிக்கை!

    தமிழ்நாடு
    தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது! தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தேர்தல் ஆணையமும் காவிமயமாகிவிட்டது! தலைமைச் செயலாளர் மாற்றத்திற்கு முதல்வர் ஸ்டாலின் கடும் கண்டனம்!

    தமிழ்நாடு
    சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!

    சென்னை எக்மோரில் அதிரடி! ₹16 லட்சம் மதிப்பிலான 31 கிலோ கஞ்சா பறிமுதல்!

    தமிழ்நாடு
    கொளத்தூரில் 'டூப்' விஜய்! தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வினோத பிரசாரத்தால் பரபரப்பு!

    கொளத்தூரில் 'டூப்' விஜய்! தவெக வேட்பாளர் வி.எஸ். பாபுவின் வினோத பிரசாரத்தால் பரபரப்பு!

    தமிழ்நாடு
    வடசென்னையில் ஆவின் பால் சப்ளை செய்வதில் சிக்கல்..!! காரணம் இதுதான்..!!

    வடசென்னையில் ஆவின் பால் சப்ளை செய்வதில் சிக்கல்..!! காரணம் இதுதான்..!!

    தமிழ்நாடு

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share