ஜல்லிக்கட்டு பொங்கல் பண்டிகையின் ஒரு முக்கிய அங்கமாகக் கருதப்படுகிறது. பொங்கல் எனும் அறுவடைத் திருவிழா, இயற்கைக்கும் விவசாயிகளுக்கும் நன்றி செலுத்தும் வகையில் கொண்டாடப்படுவது. அதில் ஜல்லிக்கட்டு எனும் ஏறுதழுவல் விளையாட்டு, தமிழரின் துணிச்சலை வெளிப்படுத்தும் சிறப்புமிக்க நிகழ்வு. அவனியாபுரம் ஜல்லிக்கட்டு மதுரை மாவட்டத்தில் நடைபெறும் மூன்று பிரபல ஜல்லிக்கட்டு போட்டிகளில் முதலாவதாகும்.
பொதுவாக தைப் பொங்கல் அன்று அல்லது அதைச் சுற்றிய தேதிகளில் இது நடைபெறும். இதைத்தொடர்ந்து பாலமேடு மற்றும் உலக புகழ் பெற்ற அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டு போட்டிகளும் சிறப்பாக நடைபெற்ற முடிந்தது. எப்போதுமே போட்டிக்கு முன்னர் காளைகளும் மாடுபிடி வீரர்களும் கடுமையான மருத்துவப் பரிசோதனைக்கு உட்படுத்தப்படுவர்.

ஆன்லைன் பதிவு மூலம் டோக்கன்கள் வழங்கப்படும். இரட்டை அரண்கள், மருத்துவ வசதிகள், போலீஸ் பாதுகாப்பு போன்றவை கட்டாயம் ஏற்பாடு செய்யப்படும். தமிழ்நாடு அரசு விதிமுறைகளின்படி, காளைகளுக்கு துன்பம் ஏற்படுத்தும் வகையில் எந்த செயலும் அனுமதிக்கப்படாது.போட்டியின் உச்சம் பரிசுகள் வழங்கும் நிகழ்வு. இந்த நிலையில், நாமக்கல் மாவட்டம் சால பாளையத்தில் ஜல்லிக்கட்டு போட்டியை அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி தொடங்கி வைத்தார். எடப்பாடி பழனிச்சாமி கொடி அசைத்து தொடங்கி வைத்த ஜல்லிக்கட்டு போட்டியில் 600 காளைகள் மற்றும் 400 மாடுபிடி வீரர்கள் பங்கேற்று உள்ளனர்.
இதையும் படிங்க: கொம்பு வெச்ச சிங்கம்டா..! வாடி வாசலில் சீறிப்பாய்ந்த அண்ணாமலையின் காளை..! அலறிய வீரர்கள்..!
ஜல்லிக்கட்டு போட்டியை தொடங்கி வைத்தவுடன் முக்கிய அறிவிப்பு ஒன்றையும் வெளியிட்டார். ஜல்லிக்கட்டு காளைமூட்டை மாடுபிடி வீரர்கள் உயிரிழந்தால் அதிமுக ஆட்சிக்கு வந்ததும் 10 லட்ச ரூபாய் நிதி உதவி வழங்கப்படும் என்று எடப்பாடி பழனிச்சாமி அறிவித்துள்ளார். ஜல்லிக்கட்டு போட்டியில் பங்கேற்கும் காலை மற்றும் வீரர்களுக்கு அரசு செலவில் இன்சூரன்ஸ் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் கூறினார்.
இதையும் படிங்க: #BREAKING: ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு அரசு வேலை… மாஸ் அறிவிப்பை வெளியிட்ட முதல்வர் ஸ்டாலின்..! செம்ம குஷி..!