திமுக தங்களது கூட்டணி கட்சிகளுடன் தொகுதி பங்கீடு பேச்சு வார்த்தையை தீவிரப்படுத்தி உள்ளது. அதே நேரத்தில் அதிமுக தொகுதி பங்கீடு குறித்து இதுவரை பேச்சுவார்த்தையை முறையாக நடக்கவில்லை. பாஜக கேட்கும் தொகுதிகளில் இழுபறி நீடிப்பதாக சொல்லப்படுகிறது. பாஜக கூடுதல் தொகுதிகள் கேட்பதால் இந்த இழுபறி நீடித்து வருவதாக கூறப்பட்டுள்ளது.
இந்த நிலையில் அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றுள்ளார். உள்துறை அமைச்சர் அமித் ஷாவை சந்தித்து தொகுதி பங்கீடு குறித்து சமூக முடிவை ஏற்றுவதற்காக சென்றதாக சொல்லப்பட்டது. இதனிடையே, தேசிய ஜனநாயக கூட்டணி தொகுதி பங்கீடு தொடர்பாக அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி டெல்லி சென்றது தொடர்பாக முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சனம் செய்துள்ளார்.

இந்த சட்டமன்ற தேர்தல் தமிழ்நாடு vs டெல்லி என்பதை முன்வைத்து தான் என தொடர்ந்து கூறி வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார். நாம் சொல்வதை நிரூபிப்பது போலவே டெல்லியில் இருந்து தான் எல்லா முடிவும் செய்யப்படுகிறது என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் விமர்சித்தார். எதிர்க்கட்சித் தலைவரும் அவரது சதாக்களும் டெல்லியில் இருப்பது எதற்காக என்றும் முதலமைச்சர் ஸ்டாலின் கேள்வி எழுப்பி உள்ளார். தமிழ்நாட்டிற்கு வழங்கப்படாமல் வஞ்சிக்கப்படும் நிதியை வாங்கித் தருவதற்காக எடப்பாடி பழனிச்சாமி சென்றுள்ளாரா என கேட்டார்.
இதையும் படிங்க: "எமனாகும் திமுக" ... காமுகர்களின் கூடாரமா அறிவாலயம்?.. வெளுத்து வாங்கிய தவெக..!!
தமிழ்நாட்டில் நிறைவேற்றாமல் முடக்கப்பட்டிருக்கும் திட்டங்களை நிறைவேற்ற வேண்டும் என வலியுறுத்துவதற்காகவா என்றும் சரமாரி கேள்விகளை முன் வைத்துள்ளார். அல்லது மாநில உரிமைகளை காப்பாற்றுவதற்காகவா என்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் தட்டுப்பாட்டை போக்குவதற்காகவா எனவும் கேட்டுள்ளார். தமிழ்நாட்டில் உள்ள வீடுகளில் அடுப்பு எரிந்தால் என்ன, எரியாவிட்டால் என்ன என்ற மனநிலையில் பேச்சுவார்த்தை நடத்துவதாக கூறியுள்ளார்.
இதையும் படிங்க: முற்றிபோன பிரச்சனை..! தவெக TO திமுக... கட்சி தாவிய ரஞ்சனா நாச்சியார்..!