கடந்த சில மாதங்களாகவே அதிமுகவில் பல குழப்பங்கள் நிகழ்ந்து வருகிறது. அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் முன்னாள் அமைச்சர் செங்கோட்டையனுக்கும் இடையே பல்வேறு கருத்து வேறுபாடுகள் ஏற்பட்டு வருகிறது. எடப்பாடி பழனிசாமி பங்கேற்ற நிகழ்ச்சிகளில் செங்கோட்டையன் பங்கேற்காமல் இருந்தது அதேபோல் எடப்பாடி பழனிசாமி என் பெயரை கூட சொல்லாமல் இருந்ததும் அதிமுகவினர்களிடையே சலசலப்பை ஏற்படுத்தியது. 
இந்த நிகழ்வு அரசியல் வட்டாரத்தில் பெரும் தேச பொருளாக மாறிய நிலையில், சட்டசபையிலும் இருவருக்கும் இடையே சமூக நிலை ஏற்படவில்லை. செங்கோட்டையன் ஏன் பேசவில்லை என்பதை அவரிடமே கேளுங்கள் என்று எடப்பாடி பழனிச்சாமி கூறி இருந்தது இருவருக்கும் இடையே மோதல் போக்கு நிலவு வருவதை உறுதி செய்வதாகவே தெரிந்தது.

அதிமுகவை ஒன்றிணைக்க வேண்டும் என்ற கருத்தை முன்னாள் அமைச்சர் செங்கோட்டையன் கூறி வந்தார். தலைமைக்கு அவர் கெடு விதித்த நிலையில் அவரது கட்சி பொறுப்புகள் பறிக்கப்பட்டன. இதற்கிடையில் தேவர் ஜெயந்தியை முன்னிட்டு பசும்பொன்னில் மரியாதை செலுத்துவதற்காக ஓபிஎஸ், டிடிவி தினகரன் ஆகியோருடன் சென்ற நிலையில், சசிகலாவையும் செங்கோட்டையன் சந்தித்து பேசினார். இதனால் ஆத்திரமடைந்த அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி செங்கோட்டையனை கட்சியிலிருந்து அதிரடியாக நீக்கி உள்ளார்.
இதையும் படிங்க: “இபிஎஸ் சொல்வது எல்லாமே பொய்” - புள்ளி விவரத்தோடு பொளந்து கட்டிய அமைச்சர் சக்கரபாணி...!
இதனிடையே, அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி உள்ளார். இரட்டை இலை சின்னம் தொடர்பான விவகாரத்தில் விரைந்து விசாரணை நடத்த வலியுறுத்தி உள்ளார். எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான பிரிவு உண்மையான அதிமுக இல்லை என செங்கோட்ட என முறையிட்டு உள்ளார். உண்மையான அதிமுக இல்லை என்பதை நிரூபிக்க கால அவகாசம் கேட்டு செங்கோட்டையன் தேர்தல் ஆணையத்திற்கு கடிதம் எழுதி இருக்கிறார். 
இதையும் படிங்க: பொறுத்திருந்து பாருங்க... முடிச்சு காட்டுறேன்!.. சபதம் எடுத்த சசிகலா...!