மேட்டூர் அணை, தமிழ்நாட்டின் மிக முக்கியமான நீர்ப்பாசன மற்றும் மின் உற்பத்தி கட்டமைப்புகளில் ஒன்றாக விளங்குகிறது. காவிரி ஆற்றின் மீது அமைந்துள்ள இந்த அணை, தமிழகத்தின் விவசாய மற்றும் குடிநீர் தேவைகளைப் பூர்த்தி செய்யும் ஜீவநாடியாகத் திகழ்கிறது. சேலம் மாவட்டத்தில், மேட்டூர் என்ற ஊரில் காவிரி ஆற்றின் குறுக்கே கட்டப்பட்டுள்ளது. இது 1925-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டு, 1934-ஆம் ஆண்டு கர்னல் W.M. எல்லீஸ் அவர்களின் வடிவமைப்பின் கீழ் ரூ. 4.5 கோடி செலவில் கட்டி முடிக்கப்பட்டது.
இந்த அணையின் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட்டவர் ஐரிஷ் பொறியாளர் வின்சென்ட் ஹார்ட் ஆவார். இந்த அணை கட்டப்பட்டபோது, உலகின் மிக உயரமான நேர்கோட்டு நீர்த்தேக்கமாகவும், ஆசியாவின் மிகப்பெரிய அணையாகவும் விளங்கியது. அணையின் அதிகபட்ச உயரம் 214 அடியும், அகலம் 171 அடியும் உள்ளது.

பாதுகாப்பு கருதி, அணை 120 அடி உயரம் வரை நீரைத் தேக்க அனுமதிக்கப்படுகிறது. முழு கொள்ளளவு 93.47 டி.எம்.சி. இது 9,347 கோடி கன அடி நீருக்கு சமம். இந்த நிலையில், தென்மேற்கு பருவமழை காரணமாக கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகள் நிரம்பியது. இதனால், கர்நாடக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் இருந்து உபரிநீர் தமிழகத்திற்கு காவிரி ஆற்றில் திறந்து விடப்பட்டுள்ளது. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து இன்று காலை முதல் வினாடிக்கு 31,000 கனஅடியாக அதிகரித்துள்ளது.
பாசன தேவைக்காக வினாடிக்கு 22,500 கனஅடி தண்ணீர் மேட்டூர் அணையில் இருந்து திறந்து விடப்படுகிறது. எனவே, கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு உள்ளது. இந்த ஆண்டு மட்டும் 3வது முறையாக மேட்டூர் அணை நிரம்பியது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இப்படியா நடந்துக்குறது? ஆத்துல தண்ணி வரல.. ஆனா BEACH-க்கு தண்ணி போகுது! பி.ஆர்.பாண்டியன் வேதனை..!
இதையும் படிங்க: ED-யிடம் சிக்கிய காங். எம்எல்ஏ கே.ஒய். நஞ்சேகவுடா.. ரூ.1.32 கோடி சொத்துக்கள் பறிமுதல்..!