ஆம்பூர் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கூலித்தொழிலாளிகளை குறி வைத்து வரும் ஜி.எஸ்.டி வரிஏய்ப்பு கடிதங்கள்.
திருப்பத்தூர் மாவட்டம் ஆம்பூர் அடுத்த வெங்கடசமுத்திரம் ஊராட்சிக்குட்பட்ட விநாயகபுரம் பகுதியை சேர்ந்தவர் ராஜ்குமார், இவர் கூலி வேலை செய்து வரும் நிலையில், இவருக்கு கடந்த சில தினங்களுக்கு முன்பு காஞ்சிபுரம் மாவட்டம் செங்கல்பட்டில் உள்ள ஜி.எஸ்.டி அலுவலகத்தில் இருந்து ராஜ்குமார் சென்னை பல்லாவரத்தில்,ஏ.எம்.ஆர். டிரேடர்ஸ் என்ற நிறுவனம் நடத்தி வருவதாகவும், இதற்கு 2,76,82,898 ரூபாய் வரி செலுத்த வேண்டும் என்ற கடிதம் வந்துள்ளது.
இதனால் அதிர்ச்சியடைந்த ராஜ்குமார் செய்தறியது திகைத்து, இதுகுறித்து உமராபாத் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார், அதனை தொடர்ந்து உமராபாத் காவல்துறையினர் இதுகுறித்து திருப்பத்தூர் மாவட்ட காவல்கண்காணிப்பாளர் அலுவலகத்தில் உள்ள பொருளாதார குற்றப்பிரிவில் புகார் அளிக்குமாறு தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: ஜிஎஸ்டி 2.0... சர்ரென உயரும் கார்கள் விற்பனை... அமைச்சர் பியூஷ் கோயல் தகவல்...!
மேலும் இதுகுறித்து ராஜ்குமார் ஊடகங்களுக்கு அளித்த பேட்டியில், தான், கூலி வேலை செய்து வருவதாகவும், தன்னுடைய ஆதார்கார்ட், மற்றும் பான்கார்ட், ஆகியவற்றை பயன்படுத்தி சிலர் தன்னுடைய பெயரில் போலியான நிறுவனம் நடத்தி 2 கோடிக்கும் மேல் மோசடி செய்துள்ளதாகவும், இதுகுறித்து அதிகாரிகள் உரிய விசாரணை மேற்க்கொண்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்,
மேலும், ஆம்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் தொடர்ந்து கூலித்தொழிலாளிகளை குறிவைத்து, சில கும்பல் அவர்களின் ஆதார் மற்றும் பான்கார்டினை பயன்படுத்தி பலகோடி ரூபாய் மோசடி செய்து வருவது தொடர்கதையாகி வரும் நிலையில் இதுகுறித்து அதிகாரிகள் உரிய நடவடிக்கை எடுத்து பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: SIR - ஐ எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பது ஏற்க முடியாதது... சுத்த விடப் போறாங்க! MP மாணிக்கம் தாகூர் பேட்டி...!