விருதுநகரில் நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர் செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, கரூரில் மரணமடைந்தவர்கள் குடும்பத்தினரை விஜய் மாமல்லபுரம் அழைத்து அழைத்து ஆறுதல் சொல்லியது குறித்த கேள்விக்கு பதில் அளித்தார். ஏற்கனவே தொலைபேசியில் பேசி உள்ளார் என்றும் விஜய் அழைத்ததன் பேரில் பாதிக்கப்பட்டவர்களே வந்துள்ளனர்., இழப்பு கரூரை சேர்ந்தவர்களுக்கு ஆறுதல் சொல்வது விஜய்..
இந்த நிலையில், இருவருக்கும் ஆன விஷயத்தில் நாம் ஏன் தலையிட வேண்டும் என்று கேட்டார். காங்கிரஸ் கட்சி சார்பில் நேரில் சென்று ஆறுதல் தெரிவித்தோம் என்றார். வழக்கமான எஸ்.ஐ.ஆர் என்பது ஆண்டுதோறும் ஜனவரி மாதத்தில் நடைபெறுவது. வழக்கமான எஸ்.ஜ.ஆர் என்பது வேறு., இது வேறு என்றார். மைக்கை பிடித்து கேள்வி கேட்கும் நீங்கள் முதல் ஏழை பாழை வரை அனைவரையும் சுற்ற விடப் போகிறார்கள் என்றார்.

இதில், எலிமினரேஷன் பாரம் பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் பீகாரில் அந்த பாரத்தில் கேட்ட விபரங்களை எடுத்து பார்த்தோம் எனும் எலிமினரேஷன் பார்மில் கேட்கும் விவரங்கள் கடுமையானது எனவும் தெரிவித்தார். விலைவாசி வேலையில்லா திண்டாட்டம் உள்ளிட்ட மக்களின் அன்றாடப் பிரச்சினைகளை மறைக்க மக்களை எப்போதும் பரபரப்பாக வைக்க வேண்டும் என பாஜக செய்வதுதான் இது என்று தெரிவித்து உள்ளார்.
இதையும் படிங்க: அரசுக்கு கெட்ட பெயர் வரக்கூடாதுன்னு நெனச்சேன்..! நீர் திறப்பு விவகாரம் குறித்து செல்வப் பெருந்தகை விளக்கம்...!
தமிழகத்தில் இதை அவசரமாக பார்க்க வேண்டிய அவசியம் ஏன் என்றும் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பது கொடுமையான விஷயமாக உள்ளது என்றும் தெரிவித்தார். ஜி கே வாசன் பண்ணையார் அவர் ஆதரிப்பதை ஏற்கலாம்., ஆனால் விவசாய குடும்பத்தில் இருந்து வந்ததாக சொல்லிக் கொள்ளும் எடப்பாடி பழனிச்சாமி ஆதரிப்பதை ஏற்க முடியாது என்றார்.
இதையும் படிங்க: மீனவர்கள் கிள்ளு கீரையா? இலங்கை தூதரகத்தை முற்றுகையிடுவோம்... மீனவர் காங்கிரஸ் உறுதி..!