இரவுப்பறவை எனும் திரைப்பட இசை வெளியீட்டு விழாவில் ஜாகுவார் தங்கம், விசிக தலைவர் திருமாவளவன், தமிழக வாழ்வுரிமைக் கழக தலைவர் வேல்முருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். அப்போது பேசிய சண்டை பயிற்சியாளர் ஜாகுவார் தங்கத்தின் கருத்துக்கள் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இந்நிகழ்ச்சியில் பேசிய அவர், தியாகராய நகர் இன்ஸ்பெக்டர் கூப்பிட்டு கடிதம் ஒன்றை காண்பித்தார், என் உயிருக்கு ஆபத்து அப்படின்னு. நான் சாவுறேன்னு பயப்படல. நீ வெளிய வராதீங்க அப்படின்னு சொன்னாங்க. நான் சொன்னேன் வண்டியில ஆயுதம் வச்சிருப்பேன் சார், வெட்டுவேன் எவன் வந்தாலும் அப்படின்னு சொன்னேன். பயப்பட மாட்டேன். ஏன்னா நான் தமிழன் தூத்துக்குடி தமிழன். ஒருவேளை ஆம்ஸ்டாங் மாதிரி ஆயிடுச்சுன்னா. போட்டு தள்ளிட்டாங்கண்ணா. அவ்ளோ ஈஸியா போட்டுற முடியாது இருந்தாலும், போட்டுட்டாங்கனா எல்லாம் டைரியில் எழுதி வச்சிருக்காங்கண்ணே.

ஏனென்றால், எனக்கு எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அத்தனை பேருடைய பெயரையும், என் டைரியில் எழுதி வைச்சிருக்கேன். எனக்கு ஒரு ஆபத்துன்னா நீங்கதான் பின்னாடி அதை பாத்துக்கணும். இந்த இடத்தில் இதை பதிவு செய்கிறேன். ஏனென்றால் எனக்கு எனக்கு வேற யாரும் இல்லை. என்ன வந்து சும்மா தொட்டுட்டுல்லாம் போய்விட முடியாது. அப்படி தொட்டா அதுக்காக பெரிய விலை கொடுக்கணும். ஒருத்தன் கூட வீட்ல குடும்பத்தோட வாழ மாட்டான்.

இதையும் படிங்க: பள்ளத்தில் விழுந்து தம்பதி பலியான கோரச் சம்பவம்.. மனித உரிமைகள் ஆணையம் கறார் உத்தரவு!
இலங்கைத் தமிழர்களுக்கு எப்போது பிரச்னை என்றாலும், திருமாவளவன் அண்ணன் போராடக்கூடியவர். தமிழர்கள் ஜெயிச்சோமோ, தோத்தோமான்னு தெரியாது, ஜெயிப்போம் என்ற உத்வேகத்துடன் பயணிப்போம். வந்தது யாராக இருந்தாலும் அவங்களை வெளியவிட்டுவிட்டு, நாம் நம்மைக் காப்பாற்றும் சூழலில் நாம் இருக்கிறோம்.
இலங்கையில் முதலில் தமிழர்கள் தான் இருந்தாங்க. பிறகு, வடநாட்டில் இருந்து வந்து அவங்க உட்கார்ந்துக்கிட்டு, தமிழர்களை அகதியாக்கிட்டாங்க. எத்தனை சகோதரிகள் செத்தாங்க. எத்தனை பேர் கொலைசெய்யப்பட்டாங்கன்னு, நான் இலங்கைக்குப் போனபோது, பார்த்து அதிர்ச்சிக்குள்ளானேன்.

எல்லோரும் ஒரு நாள் சாகத்தான் போறோம். தமிழர்களுக்காக குரல் கொடுத்து சாகிறோம் இல்லையா, அதுதான் பெரிசு. உலகத்திலேயே மூத்த மொழி நம் தாய் மொழி தமிழ் மொழி. தமிழனாகப் பிறக்கிறதே புண்ணியம். அதுவும் திருமாவளவன் அண்ணன் மாதிரியானவர்களுடன் கூட இருக்கிறது எல்லாம் ரொம்பப் பெரிய பாக்கியம்.
இதையும் படிங்க: பாக்., தாக்குதலில் பலியானோர் குடும்பத்தினருக்கு அரசு வேலை.. காஷ்மீர் கவர்னர் சொன்ன குட்நியூஸ்..!