• English
  • தமிழ்
  • हिंदी
Close Menu
TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    Thursday, September 24, 2026

    TamilWire TamilWire

    • English
    • தமிழ்
    • हिंदी
    கேலரி வீடியோஸ்
    TamilWire Logo
    • நியூஸ்
      • தமிழ்நாடு
      • அரசியல்
      • இந்தியா
      • உலகம்
      • குற்றம்
      • தொழில்
      • விளையாட்டு
    • பொழுதுபோக்கு
      • சினிமா
      • தொலைக்காட்சி
      • மீம்ஸ்
    • விளையாட்டு
      • கிரிக்கெட்
      • கால்பந்து
      • செஸ்
      • ஹாக்கி
      • இதர விளையாட்டுகள்
    • தொழில்நுட்பம்
      • மொபைல் போன்
      • லேப்டாப்
      • கேட்ஜெட்ஸ்
      • வீட்டு உபயோக பொருட்கள்
    • உடல்நலம்
      • உடல்நலம்
      • அழகு
      • உடற்பயிற்சி
      • யோகா
      • தியானம்
    • வாழ்க்கைமுறை
      • ஜோதிடம்
      • ஆன்மிகம்
      • பக்தி
      • உணவு
      • பயணம்
      • கலை
      • ஆட்டோ மொபைல்ஸ்
    • நிதி
      • பங்குச் சந்தை
      • மியூச்சுவல் ஃபண்ட்
      • தங்கம் மற்றும் வெள்ளி
      • தனிநபர் நிதி
    • மாவட்டம்
      • அரியலூர்
      • செங்கல்பட்டு
      • சென்னை
      • கோயம்புத்தூர்
      • கடலூர்
      • தர்மபுரி
      • திண்டுக்கல்
      • ஈரோடு
      • கள்ளக்குறிச்சி
      • காஞ்சிபுரம்
      • கன்னியாகுமரி
      • கரூர்
      • கிருஷ்ணகிரி
      • மதுரை
      • மயிலாடுதுறை
      • நாகப்பட்டினம்
      • நாமக்கல்
      • நீலகிரி
      • பெரம்பலூர்
      • புதுக்கோட்டை
      • இராமநாதபுரம்
      • ராணிப்பேட்டை
      • சேலம்
      • சிவகங்கை
      • தென்காசி
      • தஞ்சாவூர்
      • தேனி
      • தூத்துக்குடி
      • திருச்சிராப்பள்ளி
      • திருநெல்வேலி
      • திருப்பத்தூர்
      • திருப்பூர்
      • திருவள்ளூர்
      • திருவண்ணாமலை
      • திருவாரூர்
      • வேலூர்
      • விழுப்புரம்
      • விருதுநகர்
    TamilWire
    Districts
    மாவட்ட செய்திகள்
    ×
    • அரியலூர்
    • செங்கல்பட்டு
    • சென்னை
    • கோயம்புத்தூர்
    • கடலூர்
    • தர்மபுரி
    • திண்டுக்கல்
    • ஈரோடு
    • கள்ளக்குறிச்சி
    • காஞ்சிபுரம்
    • கன்னியாகுமரி
    • கரூர்
    • கிருஷ்ணகிரி
    • மதுரை
    • மயிலாடுதுறை
    • நாகப்பட்டினம்
    • நாமக்கல்
    • நீலகிரி
    • பெரம்பலூர்
    • புதுக்கோட்டை
    • இராமநாதபுரம்
    • ராணிப்பேட்டை
    • சேலம்
    • சிவகங்கை
    • தென்காசி
    • தஞ்சாவூர்
    • தேனி
    • தூத்துக்குடி
    • திருச்சிராப்பள்ளி
    • திருநெல்வேலி
    • திருப்பத்தூர்
    • திருப்பூர்
    • திருவள்ளூர்
    • திருவண்ணாமலை
    • திருவாரூர்
    • வேலூர்
    • விழுப்புரம்
    • விருதுநகர்
    Home》 நியூஸ்》 அரசியல்

    ஜெம் வீரமணி வழக்கில் அடுத்த பூகம்பம்... நேரடியாக களையெடுக்கும் சி.எம்.விஜய்... முக்கிய புள்ளிகளுக்கு பறந்த அதிரடி உத்தரவு...!

    ஜெம் வீரமணி போக்சோ வழக்கை விசாரித்த காவல் அதிகாரிகளுக்கு சம்மன்
    Author By Amaravathi Thu, 24 Sep 2026 10:11:03 IST

    Share Options

    Copy link

    Email
    Facebook
    X
    Telegram
    LinkedIn
    WhatsApp
    Pinterest
    Facebook X (Twitter) Instagram
    gem veeramani case summon to police higher officials

    சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாகக் கூறப்படும் போக்சோ வழக்கில், ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வீரமணி உள்ளிட்ட நான்கு பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் கைது செய்யப்பட்டவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையில் பல்வேறு திடுக்கிடும் தகவல்கள் வெளியாகியுள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    குறிப்பாக, போயஸ் கார்டனில் உள்ள ஒரு வீட்டை வாடகைக்கு எடுத்து, அங்கு பல சிறுமிகளுக்கு பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டதாக காவல்துறை விசாரணையில் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், வீரமணி கைது செய்யப்படாமல் இருப்பதற்காக பல கோடி ரூபாய் பணம் கைமாறியதாகவும் விசாரணையில் தெரியவந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த நிலையில், இந்த வழக்கில் தொடர்புடையவர்கள் என சந்தேகிக்கப்படும் நபர்களை அழைத்து விசாரணை நடத்தும் பணியில் காவல்துறையினர் ஈடுபட்டு வருகின்றனர்.

    இதையும் படிங்க: நாடே அதிரும் கொடூர வழக்கு..! திமுக கப்சிப்..! வாய தொறங்க ஸ்டாலின்..! தவெக தாக்கு..!!

    இந்த வழக்கை முதற்கட்டமாக விபச்சாரத் தடுப்புப் பிரிவு போலீசார்தான் கையாண்டுள்ளனர். கடந்த ஆண்டு அக்டோபர் மாதமே இந்த வழக்கு பதிவு செய்யப்பட்ட நிலையில், அதனை முடித்து வைப்பதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.

    இதையடுத்து, அப்போது இந்த வழக்கை விசாரித்த உதவி ஆணையர் யாஸ்மின், காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார் மற்றும் ராஜலட்சுமி ஆகிய மூன்று பேருக்கும் தற்போது போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அவர்கள் நேரில் ஆஜராகி விசாரணைக்கு ஒத்துழைக்க வேண்டும் என சம்மனில் தெரிவிக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    கடந்த ஆண்டு அக்டோபர் மாதம் புகார் அளிக்கப்பட்டு வழக்குப் பதிவு செய்யப்பட்ட நிலையில், இந்த வழக்கு ஏன் முடித்து வைக்கப்பட்டது? யாருடைய நிர்பந்தத்தின் பேரில் வழக்கை முடித்து வைப்பதற்கான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது? என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களில் மூவரிடமும் விசாரணை நடத்த காவல்துறையினர் திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    மேலும், சில காவல்துறை அதிகாரிகளுக்கு இந்த வழக்கை முடித்து வைப்பதற்காக லஞ்சம் வழங்கப்பட்டதாகக் கூறப்படும் புகார் தொடர்பாகவும் விசாரணை நடைபெற்று வருகிறது.

    ஒரு வழக்கின் விசாரணை அதிகாரி எனப்படும் ஐ.ஓ., அந்த வழக்கின் முழுப் பொறுப்பையும் ஏற்கிறார். வழக்கில் எஃப்ஐஆர் பதிவு செய்வது, யாரைக் கைது செய்வது உள்ளிட்ட முக்கிய நடவடிக்கைகள் விசாரணை அதிகாரியின் பொறுப்பில் இருக்கும். அந்த வகையில், இந்த வழக்கில் அப்போது மேற்கொள்ளப்பட்ட விசாரணை எவ்வாறு நடைபெற்றது, என்னென்ன தகவல்கள் கிடைத்தன, வீரமணியிடம் எவ்வாறு விசாரணை நடத்தப்பட்டது, விசாரணையை முடித்து வைப்பதற்கான காரணம் என்ன என்பது குறித்தும் போலீசார் விசாரிக்க உள்ளதாகத் தெரிகிறது.

    மேலும், வீரமணியுடன் தொடர்புடைய பெண் குறித்தும், அவரிடம் யார் விசாரணை மேற்கொண்டார்கள் என்பது உள்ளிட்ட பல்வேறு கோணங்களிலும் விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது.

    இதனிடையே, இந்த வழக்கில் நேற்று வீரமணியுடன் தொடர்புடைய இடங்களிலும், வழக்கில் முக்கிய நபராகக் கருதப்படும் பிரகாஷ் என்பவரின் வீட்டிலும் போலீசார் சோதனை மேற்கொண்டனர். இந்த சோதனையின்போது பல முக்கிய ஆவணங்கள் மற்றும் செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வழக்கில் நான்காவது நபராக கைது செய்யப்பட்ட கணேஷனின் செல்போனில் இருந்து பல வீடியோக்கள் பிரகாஷின் செல்போனுக்கு அனுப்பப்பட்டிருப்பது முதற்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளதாக போலீசார் தெரிவித்துள்ளனர்.

    இதையடுத்து, பிரகாஷுக்கு எதிராக தற்போது லுக் அவுட் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டுள்ளது. அவர் வெளிநாட்டில் தலைமறைவாக இருப்பதாக கூறப்படுகிறது. நேற்று வெளிநாட்டில் இருந்து இந்தியா திரும்புவதாக அவர் தெரிவித்திருந்த நிலையில், போலீசார் சோதனை மேற்கொண்டதைத் தொடர்ந்து அவர் அங்கேயே தங்கிவிட்டதாகவும், தலைமறைவாகியுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

    இந்த வழக்கில் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. மேலும், வீரமணி கடந்த பிப்ரவரி மாதம் இரண்டு நிலங்களை விற்பனை செய்திருப்பதாகவும், அந்த நிலங்களை வாங்கிய நபர்களிடமும் போலீசார் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. அந்த நிலங்களை எதற்காக விற்பனை செய்தார் என்பது உள்ளிட்ட கோணங்களில் விசாரணை நடத்தப்பட உள்ளதாக காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

    போக்சோ வழக்கில் கைது செய்யப்பட்டு சிறையில் உள்ள தொழிலதிபர் வீரமணியின் நிறுவனத்துக்குச் சொந்தமான நிலங்கள் விற்பனை செய்யப்பட்டதற்கான ஆவணங்களும் தற்போது வெளியாகியுள்ளதாக கூறப்படுகிறது.

    இந்த நிலையில், ஜெம் வீரமணி போக்சோ வழக்கை அப்போது விசாரித்த விபச்சாரத் தடுப்புப் பிரிவு காவல் ஆய்வாளர்கள் மகேஷ்குமார், ராஜலட்சுமி மற்றும் உதவி ஆணையர் யாஸ்மின் ஆகியோர் விசாரணைக்கு ஆஜராகுமாறு போலீசார் தரப்பில் சம்மன் அனுப்பப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

    இதையும் படிங்க: அரசியல், அதிகாரம், பணம்..! ஜெம் வீரமணி வலைப்பின்னல் என்ன.? சீமான் சரமாரி கேள்வி..!!

    மேலும் படிங்க
    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    ₹909 கோடி நிதியை உடனே விடுவிக்க! மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜுவிடம் அமைச்சர் ஏ.எம்.ஷாஜஹான் வலியுறுத்தல்!

    தமிழ்நாடு
    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ்குமார் உடனே ராஜினாமா செய்ய வேண்டும்! ராகுல் காந்தி ஆவேசம்!

    தமிழ்நாடு
    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    டிஜிட்டல் ஓட்டுநர் உரிமம் அரசாணைக்கு எதிர்ப்பு! தமிழக அரசு பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு!

    தமிழ்நாடு
    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழகத்தில் இந்தாண்டு டெங்கு பாதிப்பு குறைவு: சுகாதார செயலாளர் தாரேஸ் அகமது பேட்டி!

    தமிழ்நாடு
    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    தாஜ் ஹோட்டலில் நடந்த மீட்டிங்... யார் யாரை சந்தித்தேன்... வீரமணி வழக்கில் பகீர் கிளப்பிய ஜான் பாண்டியன்...!

    அரசியல்
    சி.எம்.சார் இதுக்கு உங்க பதில் என்ன?... விருதுநகரில் நெசவாளர்கள் மாஸாக கூடி எடுத்த அதிரடி முடிவு...!

    சி.எம்.சார் இதுக்கு உங்க பதில் என்ன?... விருதுநகரில் நெசவாளர்கள் மாஸாக கூடி எடுத்த அதிரடி முடிவு...!

    அரசியல்

    செய்திகள்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    TamilWire
    Facebook X (Twitter) Instagram YouTube Icon
    • நியூஸ்
    • பொழுதுபோக்கு
    • விளையாட்டு
    • தொழில்நுட்பம்
    • உடல்நலம்
    • வாழ்க்கைமுறை
    • நிதி
    • மாவட்டம்

    Subscribe to our ePaper

    Get our daily ePaper delivered in your inbox

    Subscribe

    Copyright © 2025, Skycast Media Network Pvt Ltd, or it's affiliated brands and companies. All rights reserved.
    • Privacy Policy
    • Terms
    • About us
    • Contact us

    Share Options

    Copy link

    WhatsApp
    Facebook
    X
    Email
    Telegram
    LinkedIn
    Pinterest
    Gallery கேலரி Videos வீடியோஸ் Share Share