கோவை சூலூர் அடுத்த கள்ளப்பாளையம் தனியார் கிடங்கு அருகே மனித கை ஒன்று கண்டறியப்பட்ட விவகாரத்தில், அது யாருடையது என்பது தெரியவந்துள்ளது.
கோவை காளப்பாளையம் பகுதியில் சுதாகர் என்பவர் கம்பெனி ஒன்றை நடத்துகிறார்.
இந்த கம்பனியின் மேனேஜராக வேலை செய்யும் வைரவநாதன் என்பவர் சுகாகரிடம் வந்து கம்பெனியின் ஸ்டோர் ரூம் அருகே துண்டாக ஒரு கை கிடப்பதாக தகவல் தெரிவித்திருக்கின்றார். இது குறித்து தனியார் நிறுவன மேலாளர் சூலூர் போலீசாருக்கு தகவல் அளித்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் கையை மீட்டு தடயவியல் சோதனைக்காக அனுப்பி வைத்தனர்.
மேலும் அப்பகுதிகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமரா காட்சிகளை ஆய்வு செய்தனர். அப்போது சாலையில் சுற்றித் திரியும் நாய் ஒன்று கையை எடுத்து வந்தது தெரியவந்தது. மேலும் கை கண்டறியப்பட்ட இடத்தில் இருந்து 800 மீட்டர் தொலைவில் மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் நிறுவனம் செயல்பட்டு வந்ததும் தெரியவந்தது.
இதையும் படிங்க: மது போதையில் எடப்பாடி பழனிசாமி கண்முன்பே இளைஞர்கள் செய்த காரியம்... தட்டித்தூக்கிய போலீஸ்!
ஒருவேளை நாய் அந்த கிடங்கில் இருந்து கையை எடுத்து வந்திருக்கலாம் என்ற கோணத்தில் விசாரிக்கப்பட்டது. இந்நிலையில் சூலூர் அருகே கண்டறியப்பட்டது. திருப்பூர் மாவட்டம் வளையங்காடு பகுதியை சேர்ந்த அழகு பாண்டி (28) என்பவரது கை என்பது தடயவியல் சோதனையில் கண்டறியப்பட்டது.
மேலும் கடந்த சில தினங்களுக்கு முன்பு அழகுபாண்டி ரயில் முன் பாய்ந்து தற்கொலைக்கு முயன்றதும், இதில் அவரது ஒரு கை மற்றும் கால் உண்டானதும் தெரியவந்தது. தற்போது அழகு பாண்டி கோவை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். எனவே மருத்துவ கழிவுகள் அழிக்கப்படும் கிடங்கில் இருந்து நாய் கையை எடுத்து வந்திருக்கலாம் என போலீசார் தெரிவித்துள்ளனர்.
இதையும் படிங்க: விண்ணை பிளந்த ஓம் நமச்சிவாய.. ஆடி பௌர்ணமி.. திருவண்ணாமலையில் அலைமோதிய பக்தர்கள்..!!