பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் மீதும் மது குடித்துவிட்டு தாக்குதலில் ஈடுபட்ட
சுதாகரை கைது செய்து மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்து விசாரணை.
வேலூர் மாவட்டம் காட்பாடி அடுத்த பொன்னை கணேஷ் நகர் பகுதியில் அரசு மதுபான கடை ( 11276 எண் கொண்ட கடை ) இயங்கி வருகிறது. இந்த டாஸ்மாக் கடைக்கு அருகே அதே பகுதியைச் சேர்ந்த முனுசாமி (என்ற) குமரேசன் என்பவர் கள்ளத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டு வந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில் டாஸ்மாக் கடை அருகே வசிக்கும் கூலித் தொழிலாளியான ரவி என்பவரின் மனைவி சின்னப்பொண்ணு கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு பொன்னை காவல் நிலைய தனிப்பிரிவு போலீசாருக்கு இது குறித்து ரகசிய தகவல் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: தூத்துக்குடிக்குள் கால் வைத்தால்... ஆதவ் அர்ஜுனாவிற்கு நேரடி எச்சரிக்கை விடுத்த திமுக முன்னாள் அமைச்சர்...!
அந்த பெண் புகாரளித்து இரண்டு நாட்கள் கடந்தும் போலீசார் தரப்பில் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்பட வில்லை என்று கூறப்படுகிறது.
இந்த நிலையில் போலீசாருக்கு தகவல் கொடுத்தது சின்னப்பொண்ணு தான் என்று கள்ளத்தனமாக மதுவிற்கும் மது கும்பலுக்கு தெரியவந்துள்ளது.
இதனால் ஆத்திரமடைந்த குமரேசனின் தம்பி சுதாகர் நேற்று மாலை மது போதையில் சின்னப்பொண்ணுவின் வீட்டிற்குள் சென்று எங்கள் மீது காவல் நிலையத்தில் புகார் கொடுப்பாயா? என்று கேட்டு அங்கிருந்த பெண்களையும் குடும்பத்தாரையும் கொடூரமாகத் தாக்கியுள்ளார். மேலும் பெண்களைத் தகாத வார்த்தைகளால் திட்டி, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார்.
அதே நபர் நேற்று இரவு 10 மணி அளவில் பொன்னை மருத்துவமனை அருகே நின்று கொண்டு இருந்த பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷிடம் நீயும் எங்கள் மீது புகார் கொடுத்தாயா என கேட்டு கொடூரமாக தாக்குதல் நடத்தியுள்ளார்
இதில் சுரேஷிற்கு வலது கண்ணில் படுகாயம் அடைந்த அவர் பொன்னை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்றால் மேலும் பல்வேறு பிரச்சனைகள் ஏற்படும் என அச்சம் அடைந்து சோளிங்கர் அரசு மருத்துவமனையில் அனுமதித்து சிகிச்சை பெற்று வருகிறார்.
பின்னர் காயமடைந்த பொன்னை ஊராட்சி வார்டு உறுப்பினர் சுரேஷ் அளித்த புகாரின் அடிப்படையில் சுதாகர் மீது மூன்று பிரிவுகளில் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.. தாக்குதல் நடத்தியது, அவதூறாக பேசியது, பொது இடத்தில் குந்தகம் விளைவிக்கும் வகையில் நடந்து கொண்டது என மூன்று பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது
சட்டவிரோத மது விற்பனை குறித்து தைரியமாகப் புகாரளித்த பெண்ணுக்குப் பாதுகாப்பு இல்லாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளதாகவும், குற்றவாளிகள் மீது காவல்துறை உடனடியாகக் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும்
அதேபோன்று போலீசாருக்கு தகவல் அளித்தது. கள்ளத்தனமாக மது விற்பவர்களுக்கு எப்படி தெரிந்தது எனவும் காவல்துறை தரப்பில் விசாரணை மேற்கொள்ள வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
இதையும் படிங்க: காற்றில் பறந்த விஜய் உத்தரவு... மீண்டும் வெடித்த பாட்டிலுக்கு 10 ரூபாய் சர்ச்சை... ‘குடி’மகன்கள் ஆவேசம்...!