சென்னை மாநகரத்தின் முக்கியமான நிகழ்வுகளில் ஒன்றான இந்தியக் கடற்படை மாரத்தான் நிகழ்வில் பங்கேற்க உள்ள ஓட்டப்பந்தய வீரர்கள் மற்றும் பொதுமக்களின் வசதிக்காக, வரும் டிசம்பர் 14ஆம் தேதி அன்று சென்னை மெட்ரோ ரயில் சேவை நேரம் நீட்டிக்கப்பட்டுள்ளது. பொதுவாக, காலை 5 மணி அல்லது 5:30 மணிக்குத் தொடங்கும் மெட்ரோ ரயில் சேவை, அன்றைய தினம் அதிகாலை முதலே தொடங்கப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் அறிவித்துள்ளது.
இந்தியக் கடற்படையின் வீரர்களுக்கு ஊக்கமளிக்கும் வகையிலும், உடல் ஆரோக்கியத்தை வலியுறுத்தும் வகையிலும் சென்னையில் பிரம்மாண்டமான மாரத்தான் நிகழ்வு டிசம்பர் 14ஆம் தேதி அதிகாலையில் தொடங்க உள்ளது. இந்த மாரத்தானில் பல்லாயிரக்கணக்கான ஓட்டப்பந்தய வீரர்கள் பங்கேற்பதால், அவர்கள் அதிகாலை நேரத்திலேயே நிகழ்வு நடைபெறும் இடங்களைச் சிரமமின்றி அடைவதை உறுதி செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டது.
இதன் காரணமாக, சென்னை மெட்ரோ ரயில் நிர்வாகம் விடுத்துள்ள அறிவிப்பில், இந்தியக் கடற்படை மாரத்தான் நிகழ்வை முன்னிட்டு, வரும் டிசம்பர் 14ஆம் தேதி அதிகாலை 3 மணி முதல் சென்னை மெட்ரோ ரயில்கள் இயக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் திடீர் சேவை நீட்டிப்பு, அதிகாலை நேரத்தில் பொதுப் போக்குவரத்து இல்லாத நிலையில் மாரத்தான் பங்கேற்பாளர்களை நிகழ்வு இடங்களுக்குச் சிரமமின்றிச் சென்றடைய உதவும் முக்கிய முடிவாகப் பார்க்கப்படுகிறது. இது பயணிகளின் வசதிக்கு முன்னிரிமை அளிக்கும் ஒரு சிறப்பான நடவடிக்கையாகும்.
இதையும் படிங்க: சென்னையில் சர்வதேச புத்தகக் கண்காட்சி! ஜன.16-18 வரை.. உலகின் 100க்கும் மேற்பட்ட நாடுகள் பங்கேற்பு!
இதையும் படிங்க: மழை அப்டேட்! தென் தமிழகத்தில் மழை நீடிக்கும்! சென்னை உள்ளிட்ட பகுதிகளில் லேசான மழை மட்டுமே! - வெதர் மேன் தகவல்!