தமிழக வெற்றி கழக அரசு பொறுப்பேற்றுள்ள நிலையில் 17 வது சட்டப்பேரவை கூட்டத்தொடர் இன்று நடைபெற்றது. சென்னை தலைமைச் செயலகத்தில் காலை 10 மணி அளவில் தொடங்கிய இந்த கூட்டத்தில் ஆளுநர் அர்லேகர் உரை நிகழ்த்தினார். கடந்த சில ஆண்டுகளாக ஆளுநர் உரை நிகழ்த்தாமல் வந்தது பேசு பொருளாக மாறிய நிலையில் தற்போது ஆளுநர் உரையை வாசித்து முடித்தார்.
தமிழக அரசு சார்பில் எடுக்கப்பட்டு வரும் முன்னெடுப்புகள், புதிய முயற்சிகள் மற்றும் நிலைப்பாடுகள் ஆகியவற்றை ஆளுநர் எடுத்துரைத்தார். ஆளுநர் உரை என்ற நிறைவடைந்த நிலையில் எத்தனை நாட்கள் சட்டப்பேரவை நடைபெறும் என்பது தொடர்பாக ஆலோசிக்கப்பட்டு முடிவெடுக்கப்பட்டிருக்கிறது.

சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுநர் உரையுடன் தொடங்கி முடிந்த நிலையில் அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. சபாநாயகர் ஜே சி டி பிரபாகர் தலைமையில் நடைபெற்ற அலுவல் ஆய்வு குழு கூட்டத்தில் முக்கிய முடிவு எடுக்கப்பட்டுள்ளது. சட்டமன்றம் நான்கு நாட்கள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த சபாநாயகர் பிரபாகர், வரும் செவ்வாய்க்கிழமை வரை சட்டமன்ற கூட்டத்துடன் நடைபெறும் என்று அறிவித்துள்ளார்.
இதையும் படிங்க: அதிமுக எம்எல்ஏக்கள் 21 பேர் பதவி தப்பியது..! எடப்பாடி என்ன சொன்னாரு..? சபாநாயகர் பிரபாகர் பேட்டி..!!
சட்டப்பேரவை கூட்டத்தொடர் வரும் 23ஆம் தேதி வரை நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருக்கிறது. மூன்று நாட்களும் ஆளுநர் உரை மீதான விவாதம் நடைபெறும் என்றும் இறுதியில் முதல்வர் விஜய் பதிலுரை ஆற்றுவார் என்றும் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. வெள்ளி, திங்கள் மற்றும் செவ்வாய் ஆகிய மூன்று நாட்களும் சட்டமன்றம் கூடும் என்று அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. சனி மற்றும் ஞாயிறு ஆகிய இரு தினங்கள் விடுமுறைக்குப் பிறகு மீண்டும் சட்டப் பேரவை தொடங்கி நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டிருக்கிறது.
இதையும் படிங்க: வெடிக்கும் பிரச்சனை..! பதவி விலகிய எம்எல்ஏக்கள்.! ராஜினாமா ஏற்கப்படுவதாக சபாநாயகர் அறிவிப்பு..!