குமரி மாவட்டம் குளச்சல் பகுதியை சேர்ந்தவர் நாகராஜன்.கஸ்டம்ஸ் துறையில் தலைமை காவலராக பணியாற்றி வருகிறார்.அவரது மகன் சக்தீஸ்வர்.இவர் பிளஸ் 2 முடித்து விட்டு திருச்சியில் உள்ள ஒரு கல்லூரியில் சேர்வதற்கு இருந்தார். இந்த நிலையில் சக்தீஸ்வர் உடல் எடை அதிகரிப்பு காரணமாக அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது.
உடல் எடையை குறைக்க அவர் கடந்த ஒரு மாத காலமாக யூ டியூப் பார்த்து உணவுகளை சாப்பிடாமல் பழங்களை மட்டும் சாப்பிட்டு வந்ததாக தெரிகிறது. இதற்கிடையே சக்தீஸ்வருக்கு கடந்த சில நாட்களுக்கு முன்பு திடீ ரென உடல்நலம் பாதிக்கப்பட்டது.நேற்று ஆடி அமாவாசையையொட்டி வீட்டில் பூஜை நடந்துள்ளது.அப்போது வீட்டில் இருந்த சக்தீஸ்வருக்கு திடீரென மூச்சுதிணறல் ஏற்பட்டுள்ளது.
இதையடுத்து பெற்றோர் மகனை மீட்டு குளச்சலில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவரை பரிசோதித்த டாக்டர்கள் அவர் ஏற்கனவே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். இது குறித்து தகவல் அறிந்து சென்ற குளச்சல் இன்ஸ்பெக்டர் இசக்கிதுரை மற்றும் போலீசார் வாலிபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து நாகராஜன் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்ப திவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதையும் படிங்க: வச்சான் பாரு யூடியூபர்களுக்கு ஆப்பு - இனி இந்த வீடியோக்களுக்கு வருமானம் இல்லை...!
இதையும் படிங்க: எடப்பாடி பழனிசாமி சுற்றுப்பயணத்தில் பணப்பட்டு வாடா... லட்சங்களை அள்ளி வீசிய ர.ர.க்களின் வீடியோ வைரல்