தமிழக அரசியலில் 2026 சட்டமன்றத் தேர்தல் சூழல் சூடுபிடித்திருக்கும் நிலையில், தேர்தல் கருத்துக் கணிப்புகள் பல்வேறு அதிர்வலைகளை ஏற்படுத்தி வருகின்றன. சில கணிப்புகள் திமுகவுக்கு சாதகமாகவும், சில தமிழக வெற்றி கழக தலைவர் விஜய்க்கு சாதகமாகவும், அதிமுகவுக்கு மாறுபட்ட முடிவுகளையும் காட்டுகின்றன. இத்தகைய சூழலில் அதிமுக முன்னாள் அமைச்சர் கடம்பூர் ராஜு தனது தெளிவான நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
அரசியலுக்கு வந்த எந்த நடிகரும் அதிமுகவின் வாக்கு வங்கியை பாதித்ததாக வரலாறே இல்லை என்று கூறியுள்ளார். கடம்பூர் ராஜு, தேர்தல் கருத்துக் கணிப்புகள் குறித்து பேசும்போது, “கருத்துக் கணிப்புகள் குறித்து எங்களுக்கு கவலை இல்லை. 2011ஆம் ஆண்டும் இதே போன்று திமுகவுக்கு சாதகமான கணிப்புகள் வந்தன. ஆனால் அதிமுக 200 தொகுதிகளுக்கு மேல் வெற்றி பெற்று ஆட்சியைப் பிடித்தது” என்று நினைவூட்டினார்.

மக்கள் ஏப்ரல் 23 அன்று தீர்ப்பளித்துவிட்டதாகவும், எடப்பாடி பழனிசாமியே முதலமைச்சர் என்று அவர்கள் முடிவு செய்துவிட்டதாகவும் அவர் உறுதியாகக் கூறினார். விஜயின் தவெக கட்சி மற்றும் அதன் தாக்கம் குறித்து கேள்வி எழுப்பப்பட்டபோது, கடம்பூர் ராஜு தெளிவாக பதிலளித்தார். “அரசியலுக்கு வந்த எந்த ஒரு நடிகரும் அதிமுக வாக்குகளைப் பிரித்ததாக சரித்திரம் கிடையாது என்றார்.
இதையும் படிங்க: அதிமுக வாக்குகளை தான் TVK பெற்றிருக்கும்..! கொங்கு ஈஸ்வரன் உறுதி..!
புதிதாக அரசியலுக்கு வரும் கட்சி ஏற்படுத்தும் தாக்கத்தைத்தான் தவெக தற்போது ஏற்படுத்தியுள்ளது” என்றார். புதிய கட்சிகளுக்கு ஆரம்பத்தில் கூட்டம் திரளும் என்பதை அவர் ஒப்புக்கொண்டாலும், அதிமுகவின் அடித்தளத்தை அது பாதிக்காது என்று வலியுறுத்தினார். 2006ஆம் ஆண்டு விஜயகாந்த் தேமுதிகவைத் தொடங்கியபோது நிலைமை என்னவாக இருந்தது என்பதை அவர் உதாரணமாகக் குறிப்பிட்டார்.
இதையும் படிங்க: தமிழக முதல்வர் விஜய் தான்..!! தவெக மாநில செயலாளர் புஸ்ஸி ஆனந்த் நம்பிக்கை.!