தமிழ்நாட்டிலும், இந்தியாவின் பல மாநிலங்களிலும், குறிப்பாக நகர்ப்புறங்களில் வளர்ந்த 90ஸ் கிட்ஸ் இளைஞர்கள், திருமணம் தாமதமாவதால் ஏற்படும் விரக்தி இப்போது ஒரு மறைமுகமான சமூக நோயாக உருவெடுத்திருக்கிறது. இது வெறும் பையன் கல்யாணம் ஆகலயே என்று பெற்றோர் புலம்புவதோடு முடியவில்லை. ஆழமான உளவியல், உடலியல், சமூகப் பிரச்சினைகளாக உருமாறியிருக்கிறது. முதலில் புரிந்துகொள்ள வேண்டியது, 90ஸ் கிட்ஸ் என்பவர்கள் இந்தியாவின் மிகவும் குழப்பமான தலைமுறை.
இவர்கள் படிக்கும்போது கல்வியும் வேலையும் மட்டுமே வாழ்க்கை என்று சொல்லி வளர்க்கப்பட்டார்கள். 10ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு, இன்ஜினியரிங், வேலை என்று ஓடினார்கள். 2014-15ல் கல்லூரி முடித்து வேலைக்குச் சென்றபோது, பொருளாதார வளர்ச்சி தேமேயென்று இருந்தது. இப்போது 30-35 வயதில் இருக்கும் இவர்களுக்கு திடீரென கல்யாணம் என்ற பிரச்சினை மலைபோல வந்து நிற்கிறது.

பல இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காமல் மனவிரத்தியின் உச்சத்தில் இருக்கின்றன. இந்த நிலையில் திருமணத்திற்கு பெண் கிடைக்காததால் பிரம்மச்சாரி மடம் கட்டித்தாங்க எனக் கூறி இளைஞர்கள் மனு கொடுத்த சம்பவம் நிகழ்ந்துள்ளது. கர்நாடகா, ரள்ளிகா கிராமத்தில் 30க்கும் மேற்பட்ட இளைஞர்கள் திருமணத்திற்கு பெண் கிடைக்காத விரக்தியில், தங்களுக்கு பிரம்மச்சாரி மடம் கட்டித்தர வேண்டும் என பஞ்சாயத்து அதிகாரிகளுக்கு மனு அளித்த வினோத சம்பவம் நடந்துள்ளது.
இதையும் படிங்க: ஸ்வயம் தேர்வுக்கு தமிழ்நாட்டிலேயே சென்டர்கள்... அநீதி தடுக்கப்பட்டதாக MP சு.வெங்கடேசன் பெருமூச்சு...!
விவசாய குடும்பத்தை சேர்ந்த தங்கள் மகன்களுக்கு யாரும் பெண் தர முன்வரவில்லை என பெற்றோர்கள் வேதனை தெரிவித்துள்ளனர். இந்த நிலையில், இந்த விஷயத்தை தாசில்தார் கவனத்துக்கு கொண்டு செல்வதாக பஞ்சாயத்து நிர்வாகம் உறுதி அளித்ததாக தெரிகிறது.
இதையும் படிங்க: தமிழ்நாட்டுக்கே பெருமை... ஐ.நா. விருது பெற்ற சுப்ரியா சாகுவுக்கு முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து...!